பக்கம் எண் :

38திரு அவதாரம்

 

77.         மதமுதற் குருவாம் பெரியரை மறையோர் லேவியர் சிலரை
              இதமொடே யனுப்பினர் ஜானிடம் எவரென அறியவே வினவவும்
              இதமுறு வசனமா யவரவர்க் கெதனையும் மறுதலிக் காது
              சுதனாம் கிறிஸ்தின் மகிமை ஜொலிக்க யறிக்கை செய்தனன்.

78.        தன்னையுங் குறித்தவன் மிகத்தெளிவாய் தான்கிறிஸ் தல்லவென் றறிக்கைசெய்
              பின்னையார் எலைஜாத் தரிசியோநீர் பேணியே யறிவியுமெமக் கெனவே
              அன்னவ னுமலவென் றறையுமே அல்லதோர் தரிசியோ எனவினவ
              இன்னுமே அதுமிலை யெனவுரைக்க இன்னுமே வினவின ரவரவனை.

79.        "எம்மையிங் கனுப்பினோர் வினவுவரே எவரெனச் சொலுவோம் நீரெவரோ
              உம்மையே குறித்து நீருரைப் பதென்னோ உரைப்பீரே உண்மையை" என்றனரே
              'செம்மைசெய் குவீரே கடவுட்கே சிறப்போ டவர்வழி, என்றெசாயா
              வன்மையா யுரைத்ததோர் வசனம்போல் வனமதிற் கூவுவோன் சப்தமேயான்.

80.        பரிசய வகுப்பினோர் அவண்வந்தோர் பரிந்துமே வினவினர் மறுதரமே
              கிறிஸ்துவு மெலைஜவு மலையெனிலோ கெடியுள தரிசியு மிலையெனிலோ
              தெரியவே யறிவியும் எமக்குநீரே திருமுழுக் கருள்வதேன் ஜனங்களுக்கே
              தெரிந்துகொள் வீரிதை அதிநலமாய் சிறந்ததோர் விஷயமே யுமக்குரைப்பேன்.

81.        "ஞானமு ழுக்கதோ அருளுகிறேன் நலமொடு நதியிதன் ஜலமதனால்
              ஞானபோ தகமதும் உரைக்கிறேன் நவிலுபோ தகமோ சிறந்ததல
              வானிருந் தேயெழுந் சாட்சியு ளோர்மகி மையுடை ஒருவருளர்
              நானும றிந்திலேன் நீவிருமே நமதுந டுவிலுள பெரியரை.

82.        எனதுபின் னவரே வந்தும் எனிலவர் மகிமை யுளவரே
              எனதுட மகிமை யிழிதே இவர்முனால் நிற்கவே தக்கலேன்
              உனதரா மவரது மகத்துவம் உனதமே யவரது பதரக்ஷை
              எனதுட கரமோ லவிழ்க்கவோ எடுக்கவோ சுமக்கவோ தக்கவோ.