72. ஈசனேயா னீதெலாமே யுந்தமக்கே யீய்ந்தருள்வேன் பூரணமாம் சம்மதமாய் காசுபொருள் வேறெதுமே வேண்டியதில் கண்ஜலமோ பாடுகளோ வேண்டியதில் "ஈசனென வேயெனையே யேற்றெனது ஈரடிப ணிந்தெனைவ ணங்குவீரே" தாசனென வும்மையெனக் கொப்புவித்தே யோர்தடையி லாதனைத்தும் ஆண்டுகொளும். 73. ஆண்டுகொளு மென்றவன்வாய் கூசாதே அக்கிரம வார்த்தைகளை யேதுணிவாய் ஆண்டவராம் யாவினுக்கும் யாவையுமே ஆக்கினோராங் கர்த்தருக்கே கூறவுமே மாண்டவனை யேஜெயித்தே பாரிதனை மாட்சியொடும் மீட்பதற்காய் வந்தவரோ "ஆண்டகல்வாய் சாத்தானே" என்றகட்டி வாயடைததார் பின்னுமறை வாக்கதனால். 74. பின்னுமேஜெ யித்தனரே சத்துருவை பெருமிதமாய் மாமறையின் வாக்கதனால் உன்தெய்வங் கர்த்தரைப்ப ணிந்துதொழு அவரொருவரை யேயாரா தியென்றே முன்னூலாம் வேதமதிலுள தெனமுன்னவ னுரைக்கஅதி காரமொடே பின்னடைந்தே யோடிமறைந் தானவனே பிசாசெனுமா சத்துருவே யங்கிருந்தே. 75. அங்கிருந்தே நீங்கியவோர் சத்துருவே அப்புறஞ்சி ன்னாட்களே நெருங்கியதில் அங்கவர்ப ரீக்ஷைபசி காரணமாய் ஆவிமனந் தேகமதிற் சோர்ந்திருக்க அங்கடுத்தார் தூதர்பணி செய்யவுமே ஆற்றியிளைப் பேபசியுந் தேற்றினரே அங்கிருந்த கன்றனரப் பாலவரே தக்கவரா யுத்தியோகத் தேயமர. 17. ஸ்நானகன் சாட்சி: யோ. 1 : 15; 19 - 34 வேறு 76. முந்தினன் ஜானெனுந் தவமுனியின் முதுமொழிப் போதனை யாமனைத்தும் சிந்தனை செய்தவர் தீரள்ஜனங்கள் விரைந்துமே வந்தனர் தீக்ஷைபெற மன்னிய கீர்த்தியே பரவியெவண் மகிமையார் சாலேம்ப திபுகுந்தே துன்னிய வேதியர் பெரியோர்மனம் துடிக்கவே செய்ததே செவிபுகுந்தே. |