67. "கொண்டுபோவா ரென்றுதிரு மாமறையிற் குறித்துத றிந்திலீரோ" என்றனனே விண்டுபதிற் சொல்லினரே ஜேசுபரன் "வியர்த்தமேதான் உன்தனுட இம்முறையும் கண்டுகொள்வா யங்குளதே கர்த்தராமுன் கடவுளைப்ப ரிக்ஷைபாரா யேபின்னிசன் கொண்டுபோனா னேயொருவு யர்மலைக்கே கொடுமுடியி லேநிறுத்திக் காட்டினானே. 68. காட்டினனே யிவ்வுலகின் ராஜியங்கள் மாட்சிகனம் பெற்றிலங்கும் ராஜியங்கள் வாட்டமிலா திப்புவிக்கே வேண்டியவாம் பல்வகைப்பட் டேயருள்சீன் ராஜியமே நாட்டமேகொள் நாடுகளாற் காலமெலாம் நன்னிதிநி றைந்தஇந்து ராஜியங்கள் தாட்டிகமா யேவிரிரோம் ராஜியமும் தாண்டியதை மேற்குலகின் ராஜியங்கள். 69. ராஜியங் ளுள்ளுபல பலவிதமாய் ராஜருளே யேகசக்க ராதிபரின் ஆட்சியின்கீழ் பல்லரச குள்ராஜ்யம் ஏகஅரசா கஆளும் ராஜியங்கள் சாட்சியாயே சொத்துகளா டம்பரமும் மாட்சி கொண்டிலங்கும் ராஜியங்கள் வீழ்ச்சியேயி லாதகன்றே யோங்கிவளர் வெற்றியுள ராஜியங்கள் காட்டினனே. 70. காட்டினனே பூவுலகின் மாமகிமை கனகுதனம் மேற்குலகின் மாட்சிகளே காட்டினன்கி ழக்குலகின் மாமகிமை கனதனமே நித்திலவி ரத்தினமே வாட்டமில்த ளங்குலமாம் மாமகிமை வணங்காத மன்னர்கொலு மாமகிமை கூட்டமாயே மாளிகைகள் காப்பரண்கள் குடிஜனங்க டல்மலைவ ளம்மகிமை. 71. மகிமைகொள் ராஜ்யங்களும் காட்டினனே மகிமையெலாம் நீத்துலகில் வந்தவராம் மகிமையில் லாவறுமை கொண்டவர்க்கே வகையொடுவி ரித்தனனே தன்மகிமை மகிமையொடே தோன்றுகிற பூதலமும் மகிமையுடை ஐஸ்வரிய ராஜியங்களும் மகிமையினுக் கேற்றதொரு ஆட்சியாயே மகிமையுள வாமனைத்தின் ஈசனேயேன். |