பக்கம் எண் :

திரு அவதாரம்35

 

62.        கடும்பசியாற் றுன்பமுறு மித்தருணம் தனக்குதவும் வேளையெனக் கண்டவனும்
              திடுமெனச்சோ தித்தனனே தீயனவன் "கடும்பசியாற் றுன்புறுதல் நன்றலவே
              எடுத்துதவு மித்தருணம் உம்வலமை எழில்மிகும்ப ரன்கடவுள் மைந்தனெனில்
              விடுமுமது தீப்பசியக் கற்களையே விதியுமவை யப்பமாகப் பார்ப்ப" மேதான்.

63.        பார்ப்பமெனச் சொல்லவுமே தெய்வசுதன் பதிலுரையாய் வல்லசர்ப்பச் சத்துருக்கே.
              ஏற்பமோயா முந்தனுத்தி சத்துருவே எமதுபலங் காட்டவுமே வேண்டியதோ
              காப்பமோயாம் எம்முயிரை நீகுறிக்கும் கபட்டுவழி யாமிதனின் மூலமாயே
              பார்ப்பமோயாம் வேறுவழி யுண்டோவெனப் பரனருளிச் செய்ததிரு மாமறையில்.

64.        "திருமறையோ சொல்வதிதே நீயறிவாய் ஜீவனையே காக்கவேயப் பம்புசிக்கும்
              ஒருவழிதா னுள்ளதோசொல் லிப்புவியில் உள்ளதுவே வேறுவழி நிச்சயமாய்
              திருப்பரனின் வாயினின்றே ழும்புவதாம் திவ்யமொழி ஜீவவழி யாகுமென
              திருப்பரன்ப கர்ந்ததொரு வாக்கதாயே திருமறையி லெழுதியது முள்ள"தென.

65.        எழுதியது முள்ளதெனச் சொல்லவுமே யிம்முறையை விட்டவனும் அம்முறையின்
              எழுத்தினையே கொண்டுமேம யக்குளதாம் எண்ணமொடே கானகமா மங்கியிருந்தே
              எழுந்தனனே ஜேசுவையு மேகொணர்ந்தே ருசலேமினா லயத்திலு ன்னதமாய்
              எழும்பியவோ ருப்பரிகை மேனிறுத்தி யிவ்வசன மேயுரைத்தான் வஞ்சகனே.

66.        நிறுத்தியேயு ரைத்தனனே வஞ்சகனே, "நீர்பரனின் மைந்தனெனி லிங்கிருந்தே
              திருத்தமாக வேகுதிப்பீர் தாழ்தரையில் தீங்கெதுமே நேராதே காப்பதற்காய்
              பொருந்தாதே யும்மடிகள் கற்களிலே புண்யபரன் கற்பிப்பார்         தூதருக்கே
              வருத்தமேயு மக்குறாதே தங்கைகளில் வாக்காக ஏந்தியுமைக் கொண்டுபோவார்".