57. தீக்ஷையேமு டிந்துகரை யேறிவர செய்யஜெபம் வானமுந்தி றந்ததுவே மாட்சியாயி றங்கினர்பு றாவடிவில் வானமிருந் தோர்பரிசுத் தாவியரே மாட்சியாக வந்துசிர மேலமர மானுடகு மாரனபி ஷேகமானார் சாட்சியாய்த்தி ருப்பரனின் சந்நிதநின் றேயெழுந்த தோருரையே தெய்வவுரை. 58. திருவுரையோ வானமெலாம் பூவுலகும் சிர்ஷ்டிகராந் தெய்வமுட வாக்கதுவே நிருமலராங் கர்த்தரது வாக்கிதுவோ "நீரெமது நேசதிரு மைந்தனேதாம் உருக்கமிகு மெம்பிரியம் உம்முடமேல் உண்மையாய்நி லைத்திருக்கும் என்றுமென திரித்துவரே யானவர்மெய்த் தெய்வமென தெய்வசுத னீவரென மெய்ருசுவாம். 59. திருமகனென் றேயெழுந்த வாக்கொடுமே திருமகனா ரேகினாரத் தீரநின்றே அரியதிரு ஊழியமே தம்மையொறுத் தரியதிற லோடுசெயத் தக்கவரென் றறியவும்நற் சாட்சியுமே தாம்பெறவே அரியதொரு சோதனையிற் றேறவுமே திருவருளா மாவியரி னேவுதலாற் பரபரப்பாய்ச் சேர்ந்தனரே பாலைவனம், 60. பாலைவனஞ் சேர்ந்தமனு மைந்தனுமே பரிக்ஷையினிற் றேறிவெளி யேறவுமே. காலைமுதல் மாலைவரை ராவிலுமே கடவுளொடே தான்தனியா யேதரித்தே வேலையிது வேயெனத்தி யானிமதில் வேதபடிப் பேஜெபத பத்திலும் காலமெலாந் தான்கழித்தே யவ்வனத்தில் கழித்தனரே காலமொரு நாற்பதுநாள். 61. காலமெலாம் நாற்பதுநாட் கானகத்தில் வனமிருகங் கள்நடுவிற் சஞ்சரித்தே. காலமெலாம் ராப்பகலு பாசித்தே கடுகளவு போஜனமுண் ணாதிருக்க காலமதிற் சாத்தான்சோ தித்துவர கடிந்துமேஜெ யித்தனரே சத்துருவை காலமாமந் நாட்களுமே பூர்த்தியுற கடும்பசியாற் றுன்பமேய டைந்தனரே. |