பக்கம் எண் :

திரு அவதாரம்33

 

52.        "பதரையேபி ரிக்கிறதாங் கூடையதே பண்பொடுமி ருக்கிறதன் னோர்கரத்தில்
              பதறாதே தங்களம்வி ளக்குவாரே பண்பொடுமே ரித்துமணி யைப்பதரை
              சிதறவிடா தேமணிகள் யாவையுமே சேர்ப்பாரே தம்முடக ளஞ்சியமே
              பதரையோஅ விந்துபோகா அக்கினியில் பண்பொடுமெ ரிப்பாரே" என்றுரைத்தான்.

53.        பாவிகளா யங்கொளுவோர் மாதிரள்பேர் பண்பொடுமே ஸ்நானகனாற் றீக்ஷைபெற்றார்
              மேவியுமே யேற்றனரன் னோனையொரு மெய்த்தரிசி யென்றுசொலி யேற்றனரே
              பாவிகளுக் காகவொரே மெய்ப்பலியாய்ப் பாரினிலே வந்தவராம் ஜேசுபரன்
              பாவிகளோ டங்குதீக்ஷை தான்பெறவே வந்தனரே பண்பொடுமே தீக்ஷைபெற்றார்.

16. திரு அவதாரன் தீக்ஷை பெறல், பரீக்ஷை.மத். 3 : 13 - 17;
மாற். 1 : 9 - 13; லூக். 3 : 21, 22, 4 : 1 - 11, 4 : 1 - 13.

54.        நீதியாம்ப்ர மாணநிறை வேற்றிநிறை வேறவுமே தர்சனங்கள் பூரணமாய்
              மேதினியில் வந்தவராம் மேசியாவோ விர்த்தசேத னமடைந்தார் அஷ்டதினம்
              போதியவாம் முப்பதாண்டு பூர்த்தியுற புண்யமிகு மூழியந்து வங்குமுனே
              வேதியனாற் றீக்ஷையடைந் தாவியரால் விண்ணபிஷே கம்பெறவே வந்தனரே.

55.        வந்தனரே கண்டவரை ஜானவனே "வருவதேனீர் தீக்ஷைபெற எந்தனிடம்
              இந்தவிதஞ் செய்வதேநி யாயமல்ல அடியவனும் மாற்பெறவே பாத்திரனே
              சிந்தனைசெய் தென்னைவிடும்" என்றுரைக்க "தடைசெய்யே லேதுமேயான் தீக்ஷைபெற
              இவ்விதமே நீதியெலாஞ் செய்வதுதான் அமைந்துளதே யென்தனுக்கே" என்றனரே.

56.        எந்தனுக்க மைந்ததெனச் சொன்னவரே நீசமனுப் பாவியரா மேனையருள்
              நிந்தையுறு பாவமிதே யொன்றலாதே வேறெதுமோ பேதமிலா நிர்மலரே
              "உன்தனது ஜோலியிதைச் செய்" யெனவே சொல்லியுளே சென்றனரே ஜார்டனிலே
              சிந்தனைசெய் யாதவனும் ஜேசுவுக்கே தீக்ஷைகொடுத் தான்திவிய நாமமதில்