47. போர்வீர ரானவரும் அவ்விதமே போட்டனரே யந்தவொரே கேள்வியையே நேர்பாதை யாய்ச்செலுவீர் யாவருக்கும் நீரிடுக்கண் ணேதுமேசெய் யாதிருமின் யார்மேலுஞ் சாட்டாதீர் உண்மையிலாக் குற்றமேதும் யாருமக்கே தீங்கிழைத்தும் நேரான சம்பளமே போதுமென திர்ப்திமன மேயுளரா யிருமின். 48. எந்தவோர்நி லைமையினி லுள்ளவர்க்கும் ஏற்றதொரு போதனை புகன்றனனே அந்தபோர்நி லைமையுள ஜீவியத்துக் கவசிய போதனையு மேயதுவே சொந்தமாந்தன் ஜீவியத்தின் மாறுதலே உன்னதமாஞ் சோர்விலாத ஜீவியமாம் அந்தமாஞ்ச டங்குகளாம் யாவிலுமே சாலமேன்மை யானதென்று ணர்த்தினனே. 49. சிந்தனைசெய் தார்தமது உள்ளமதில் சேர்ந்தவராம் யாவருமன் னோனிடமே வந்தவரோ நம்முடமுன் னோர்க்குரைத்த தாமவர்நம் மேசியாவே ஈவர்" என "இந்தவிதம் யாருமேநி னைக்கவேண்டாம் மாவெழிலாம் மேசியாவே யானிவேனே வந்தவனு ணர்த்தவேம னந்திரும்பற் கேற்றவகை தீக்ஷைதர வேயுமக்கே." 50. "தீக்ஷையே கொடுப்பதற்கே வந்தவன்யான் வகையொடுமே யிந்நதியின் தீர்த்தமதால் தீக்ஷையே கொடுப்பரெனின் பின்வருவோர் திருவருளா மாவியினா லக்கினியால் சாக்ஷயாயு மக்கிதுவே சொல்லுகிறேன் சமஸ்தமாஞ்ஜ னங்களேய றிந்துகொள்ளும் தாட்சியேயா காரெனது பின்வந்தும் தமியனான என்னிலுமே மாபெரியார். 51. பேதமுளதே யதிகம் எங்களுக்குள் பேதமதோ மாபெரித றிந்துகொளும் பேதமிதே பூமியினின் றேயுதித்தேன் மாபெரியோர் வானிருந்தி றங்கியவர் போதனைசெய் தேவழிதி ருந்துமொரு புல்லியனா மூழியனே யன்னவரின் பாதரக்ஷை யேயவிழ்க்க வாரதையோ பாத்திரனே யல்லவேசு மக்கவுமே. |