42. பெருமிதமாய்ப் போதனைக ளைபுகன்றான் எவரெனினும் பேதமில்லா தேகடிந்தான் "விரியனெனும் பாம்பினது குட்டிகாள்நீர்" விஷமெனுமா பாவமேநி றைந்துளோரே வருஞ்சினம தற்கேநீர் நீங்குதற்கே வகையுமக்கே காட்டினன்யார் உம்மனமே திரும்புதலுக் கேற்றகனி யேகொடுப்பீர் திடமொடுமி டுக்கவழி யேசெலுவீர். 43. நல்லவிசு வாசியரின் தந்தையராம் நமதுடமுன் னோனபிராந் தந்தையரை சொல்லவுமே நீர்நினையா தீருளத்தில் எமதுடைய சொந்தமான தந்தையென கல்விவைகள் தானிருந்துங் கர்த்தரவர்க் கனந்தமான பிள்ளைகளுண் டாக்குதற்கே வலலவரே யென்றறிந்து கொள்ளுவீரே வகையொடுமே செப்புகிறேன் யானுமக்கே. 44. மரங்களெனு மானுடராம் நீவிரெல்லாம் நற்கனி கொடுக்குமர மாகுவீரே. மரங்களது வேரகுகே கோடரியே வைத்துமேயி ருக்கிறதே யிப்பொழுதே அறமிகுந்த நற்கொனிகொ டாமரங்கள் யாவையுமே வெட்டியுமே யக்கினியில் தரந்தரமாய்ப் போட்டுமெயே ரிப்பாரே தப்பாதே யெச்சரிக்கை யாயிருமின். 45. "என்னசெய வேண்டியதோ என்றெமக்கேஇ சையுமெனக் கேட்டனர்ஜ னங்களேதான் தன்னிடமே ரண்டங்கியி ருக்குமெனில் தயவொடொன்றே மீய்குவீரில் லானுக்கே உண்ணுதற்கா காரமேயில் லாதனுக்கே உனதுணவே யீய்ந்திடுக அவ்மிதமே உன்னிடத்திற் போலுனய லானிடத்தும் உறுதியாயே அன்புகொள்க" என்றுரைத்தான். 46. அப்படியே யந்தவொரே கேள்வியையே ஆயமதை கொள்பவருங் கேட்டவனரே "எப்படியோ உங்களுக்கேற் பட்டதலால் ஏதெனினு மேயதிகம் வாங்காதீர் மெய்ப்பரனின் பிள்ளைகளே யாவதற்கே மேன்மையான ஜீவியமே செய்குவீரே தப்பிதமாய் வன்கொடிதாய் யாரிடமும் தண்டமேவாங் காதிருமின்" என்றனனே. |