37. வல்லரசு தீபெரியூ ஆளுகையின் ஆண்டுபதி னைந்தெனுமவ் வருடமதில் நல்லறந்தாழ் நாடெனுமவ் யூதநாட்டில் பொந்தியுப்பி லாத்ததியன் காலமதில் நல்லறம்வாழ் ஆலயத்தில் அன்னாவொடும் காய்பாவென் னர்ச்சகரின் காலமதில் வல்லபரன் வாக்குமேயுண் டானதவண் பாலைவனந் தன்னிலேமுன் தூதனுக்கே. 38. வெளியேறி வந்தனனே நாள்வரவே வேந்தன்முன் செல்லுமொரு தூதனாக வெளியாகும் இஜ்ஜெகத்தின் மெய்யொளிக்கே மெய்யாவே கூறுமொரு சாட்சியாயே வெளியாம் வனத்தினிலே கூப்பிடுவோன் மிக்கவேயு ரத்தவொரு சப்தமென்ன வெளியேறி வந்தனனே சீர்செயவே மேன்மைமிகு கர்த்தருக்கே யவர்வழியே. 39. முன்னோர்கால் தம்முடைய ஊழியனால் முன்னவனு ரைத்ததொரு வாக்கதேபோல் இந்நாளில் ஜார்டன்ப்ர தேசமதில் யூதவன மானதெனு மிவ்வனத்தில் "மன்னவன்மா கர்த்தரரு ளால்மனனே மாறியேகு ணப்படுமின்" என்றுரைத்தே மன்னவன்தம் முன்செலுமோர் தூதனாக நல்முனிவன் ஜானவனே தோன்றினானே. 40. மனமதுநீர் மாறியேகு ணப்படும்வான் மகிமையுறு ராஜியம்நெ ருங்கியதே கனமிகும்வான் ராஜியம் டைந்துயவே களையுமேயும் பாவமெலாம் நைந்துமனம் தினமுமேநீர் செய்துவரும் பவமெல்லாம் திரண்டுமேயோர் குவிய லாகுமன்றோ இனமொடுநீர் பாவமனிப் பேபெறற்காய் இறைஞ்சியேய றிக்கைசெயும் என்றுரைத்தான். 41. திருநதியாஞ் ஜார்டனிரு பக்கநின்றும் எருசலையி னின்றுமயல் நாட்டினின்றும் திரண்டுவந்தா ரேஜனங்கள் மாதிரளாய் அடைந்தனர்பர் சேயர்சது சேயருமே தருமகுண மற்றவர்போர்ச் சேவகரும் தயவிலரா யங்கொளுவோர் மாகொடியோர் அறிக்கையிட்டா ரேமனந்தி ரும்பியன்றோர் அடைந்தனரே தீக்ஷையேயன் னோனிடத்தில். |