பக்கம் எண் :

திரு அவதாரம்29

 

32.        உனையோ அருமைப் பாலா உனதரின் தரிசி யென்பார்
              உன்னத ரவர்நந் தெய்வம் உருக்கமா மிரக்கத் தாலே
              மன்னிப் பெனும்ரட் சிப்பே அவர்மகர் தமக்கே காட்ட
              மன்னவன் முன்சென் றன்னோர் வழியை யாயதஞ் செய்வாய்.

33.       அந்தகா ரத்தில் உளோர்அமர்ந் துசாவிரு ளிற்றானே
              மந்தா ரம்போய் வான மகத்துவ ஒளிபெ றற்கே
              நந்தா ளேந டத்த நலம்சமா தான பாதை
              சந்தித் ததேவா னின்றே அருணோ தயமே நம்மை.

15. முன் தூதனின் ஊழியம். மத். 3 : 1 -12; மாற் 1 : 2 - 8;

லூக். 1 : 80; 3 : 1 - 18.

 வேறு

34.        பாலகன்வ ளர்ந்துடலும் பலப்படவே மாபரிசுத் தாவியரின் பலமடைந்தான்
              காலமுமே வந்துஜெப ஆலயமதில் உள்ளகலா சாலையினியிற் பயின்றனனே
              சாலவேப்ர மாணசங் கீதமுமே தர்சனமென் றாகமும் படித்தனனே
              ஞாலமெனு மிப்புவியைக் கண்டித்துமே தான்திருப்ப வல்லவனா யறநெறியில்.

35.        பாலியங்க டந்தவனும் பள்ளிவிட வாலிபப்பி ராயமுமே யடைந்தனனே
              ஜோலியாந்த னக்குரிய ஊழியத்தில் சோபிதமா யேதகுதி யடைந்தனனே
              வேலியாந்தன் வீடுமுற வுளார்விட்டே வான்வெளியிற் காட்டினிலே தரித்தனனே
              மேலினது இன்பமுமே முனிந்துதவ வேடமது மேதரித்தே தவமிருந்தான்.

36.        முப்பதாம்பி ராயமுமே வருமளவும் முன்னவனின் பாதைகளைச் சரிசெயவே
              தப்பியவாம் ஆடுகளென் ஜனங்களையே தப்பிலாச்சீர் பாதையினிற் றிருப்பவுமே
              ஒப்பிலாத ஊழியமே துவங்குவரை ஒட்டகம் யிர்ப்புடவை யணிந்தவனாய்
              அப்படிவ னத்திலுள வுணவருந்தி தங்கியவ ணேயிருந்தான் வனமதிலே.