வேறு 25. "ஸ்தோத்திர மல்லே லூயா தோத்திரப் பாத்தி ரர்க்கே தோத்திர மிஸ்ரா வேலின் துங்கனா மாட்சி யோர்க்கே தோத்திரம் வானோர் சேனைத் தோன்றலே கோவா வுக்கே தோத்திர மல்லே லூயா ஜோதிய னாதி யோர்க்கே. 26. தம்ஜன மிஸ்ரா வேலைத் தாம்தய வாய்ச்சந் தித்தார் தம்ஜனத் தார்க்கே மீட்பே தாமுடித் தாரே யன்றோ தம்மடி யார்க்கோர் கொம்பே தாமுளைப் பிப்போ மென்றே தம்திரு தர்சி யாலே சாற்றினோர்க் கல்லே லூயா. 27. தந்திரு வாக்கே போலே தாவிதின் வம்சந் தன்னில் இந்தநற் காலந் தானே ரட்சணி யக்கொம் பீதே அந்தமாய்த் தோன்றற் காயே அன்பினாற் செய்தோர்க் கேதான் சந்ததந் தோத்ரந் தோத்ரம் நித்யச தாகா லந்தான். 28. ரட்சையோ மாம கத்தாம் ரட்சையே சத்ரூ நின்றே ரட்சைநம் சத்ரூ வானோர் ராட்சதர் கைகள் நின்றே மாட்சியாய் நம்மை மீட்கும் மாட்சியாம் ரட்சை தானே மீட்சியோ பாவம் நின்றே மேன்மையாம் மீட்சி தானே. 29. தந்திரு வுடன்ப டிக்கை நினைந்தார் தவறா தென்றும் நந்திரு ஜனத்தின் மேலே நலமொடு வைத்த தாகும் தந்திருக் கருணை தன்னை தயமிகக் காட்டி னோராம் நந்திருக் கடவுள் தம்மை நலமொடு தோத்ரிப் போமே. 30. நற்பிதா விஸ்வா சர்க்கே நம்பிதா அபிரா முக்கே தற்பர னிட்ட வாணை நிறைவுறத் தவறா தேதான் பொற்பிலா நம்சத் ரூக்கள் புல்லிய கரங்கள் நின்றே அற்புத மாயே நாமே அத்தனால் மீட்கப் பட்டோம். 31. உத்தம அடியா ராய்நம் முயிருள நாளெல் லாமே எத்தனை யிடருற் றாலும் எதுவித அச்சம் இன்றே பந்தமாய் நேர்மை யாயே பரனவர்க் கூழ்யஞ் செய்ய அத்தனி னருள்பெற் றுய்ய அதுவிதஞ் செய்தா ரன்றோ. |