18. அறிந்தனரோ இல்லையிதைச் சீடருமே அதன்கருத்தோ யாதெனவே அத்தருணம் அறிந்தனர ருட்பரனு யிர்த்தபினால் அவர்சொலைநி னைந்தவரே யச்சமயம் அறிந்தனர ருட்பரனின் மாமறையில் அறைந்ததொரு மாவருளாம் வாக்கையுமே அறிந்துதிட விஸ்வசமுங் கொண்டனரே அவர்மனம யக்கமும கன்றவராய். 19. தெய்வஆல யத்துளேசென் றங்குளோர்க்கே திருவுபதே சம்புகன்றே யாவருக்கும் மெய்வருந்தும் மக்களுட நோய்தவிர்த்தே மெலிந்தவரா மானுடர்க்க ளித்துபலம் மெய்யுபகா ரம்புரிந்தார் யாவருக்கும் பலவிதமா மற்புதங்கள் மேன்மைமிகச் செய்துமேதாம் யாரெனவே யாவருக்கும் தெளிவுறவி ளங்கவுமே காட்டினரே. 20. அவரதற்பு தங்களைக்கண் டோர்பலபேர் விஸ்வசம்வைத் தாரவரின் நாமமேலே அவர்களுக்கி ணங்கியுமே நம்பவில்லை அவரறிந்தி ருந்ததனால் யாவரையும் அவரறிந்தி ருந்தனரே மானுடரின் அகத்தினந்த ரங்ககமான யாவையுமே அவருக்கோ யாவனுட சாட்சியமே அவசியமில் லைமனுட ரைக்குறித்தே. 21. நிக்கோதேமு யோ. 3 : 1 - 21. 21. அற்புதமாம் யாவுமேய றிந்தவனாம் நிக்கதேமு வாமதிப னானவனே பொற்பரனாஞ் ஜேசுவின்கா ருண்ணியமும் மாபுனித போதனையு மேயறிந்தே நற்குருவா வாரெனம தித்தவரால் நல்லுபதே சம்பெறவி ரும்பினனாய் தற்பரனி டம்வரப்ப கல்மயங்கி யோரிரவி லேதனித்தே வந்தனனே. 22. அறிந்துளேன்சி றந்தவோர்ர பீயெனவே நீவிரோர ருட்குருவென் றேதிடமாய் தெரிந்துளமே தெய்வமிட மேயிருந்தி றங்கியசி றப்புரையீ விரெனவே ஒருவனுமே யாரெனிலுந் தெய்வமவ னோடுமேயி ராவிடிலோ நீறியற்றும் ஒருசிறிய அற்புதஞ்செய் யானெனவு ரைத்தனனே யாதிபனாம் நிக்கதெமு. 23. மறுமொழியாய்ச் சற்குருவு ரைத்ததும கத்துவமாந் திவ்யவுப தேசமாமே ஒருவனுமே மாறிப்பிற வாவிடிலோ தர்சியானே வான்ராஜ்ய மோர்பொழுதும் உறுதியாயு ரைக்கி றேனேயானுனக்கே இதுமொழியோ மாறாதயுண் மையுண்மை குருரபியே யென்பெயர்வ கித்தவனோ குருபரனின் சொற்பொருள றிந்திலனே. |