பக்கம் எண் :

46திரு அவதாரம்

 

24.        மறுதரமும் முதியவனா மோர்மனுடன் பிறப்பதுவும் முடியுமோதான் எதுவிதமாய்
              மறுதரமுந் தனதனையி னுதரமதிற் புகுந்தொருமா னுடனுமேஜெ னிப்பதுண்டோ
              ஒருவனுமே யெவனுமேய றிந்ததில்லை உலகிலொரு ரகசியமா மிவ்விஷயம்
              தெரிவியும்நீர் எனக்கிதனின் ரகசியமே தெளிவுறயான் விளக்குவீரே திருக்கருத்தை.

25.        பிறவாதி ருப்பனெனி லோர்மனுடன் பிறிதொருத ரஞ்ஜலத்தா லாவியினால்
              பிரவேச மோபெறுதல் கூடியதில் கடவுளின்ம கத்துவமாம் ராஜியத்துள்
              பிறப்பதுவோ மாமிசமே மாமிசத்தால் பிறப்பதுவொ ஆவியேதான் ஆவியினால்
              பிறக்கவுமே வேண்டுமினு மோர்தரமென் றுரைப்பதினா லாச்சரியங் கொள்ளவேண்டாம்.

26.        இட்டமாமி டந்தனிலே காற்றுலாவி பிரியமாமி டத்தினுக்கே செல்கிறதே
              திட்டமாய தன்தொனியே கேட்கிறாயே தெரிகிறாயே காற்றடிப்ப தென்றதனால்
              சட்டமாய தேவருமோர் தானமெதோ கடந்ததுவே செல்கிறதாந் தானமெதோ
              திட்டமாய றிந்ததில்லை யவ்விதந்தான் இருக்கிறானே ஆவியாற் பிறந்தவனும்.

27.        இவைகளெலா மெவ்விதமா மென்றுரைக்க நிக்கதேமென் னதிடனான போதகனே
              இவைகளைநீ யறியாதி ருக்கிறாயே இஸ்ரவேலிற் போதகனா யேயிருந்தும்
              இவைகளையான் தெளிவாய்வி ளக்குகிறேன் இசைக்கிறேனே யிதையுனக்கே மெய்யாயே
              அவைகளைநீ கவனமாயு ணர்ந்துகொள்க அறிந்துகொள்வா யேயவற்றை மாதெளிவாய்.

28.        நாங்களோஅ றிந்தவைக ளானவையே நலமொடும றிவிக்கின்றோ மேயுமக்கே
              நாங்களுமே கண்டவைக ளானவைக்கே நலமொடுமே சாட்சியகொ டுக்கிறோமே
              நீங்களோவென் றாலெமது சாட்சியையே நெகிழ்கிறீரே மனமில்லை யேற்கவதை
              நீங்களோதான் உம்மனதின் சாட்சியையும் நெருக்கியேய லட்சியமே செய்கிறீரே.