116. பேசினர் தமக்குட் சீடர் பிறிதெவ னோவா காரம் பாசமா யிவன்கொ ணர்ந்தே படைத்திருப் பானோ என்றார் தாசனா யனுப்புந் தந்தை தயைநிறை சித்தம் போலே நேசமாய் நடத்திக் க்ரீயை முடித்தலென் மெய்யா காரம். 117. அறுப்புக் கின்னும் நான்கு மாதமே யாகு மென்பீர் அறுப்பதற் கேயா யத்தம் வயல்களெல் லாமிப் போதே அறுக்கவே வயல்கள் யாவும் விளைந்தன என்றே பாரும் விருப்பொடுங் கண்ணே றிட்டே விழித்துமே பாரும் நன்றாய். 118. அறுப்பவன் விதைப்போ னோடே அடையவா னந்தம் ஒன்றாய் அறுப்பவன் அடைந்தே கூலி அனந்தமாம் ஜீவ னுக்காய் விருப்பொடும் பலனைப் பெற்றே சேர்க்கிறான் மிகுதி யாயே சிறப்பொடும் விளங்குமீ தால்செம் மையாம் வழக்கச் சொல்லே. 119. விதைப்பவ னொருவன் ஆவான் அறுப்பன் பிறனே வேறே இதையனை யதுவே யிப்போ உமையனுப் பியதும் யானே விதைக்கவு மிலையே நீவிர் எதுஞ்செய விலையே வேறே விதைத்தவர் பலர்வே றாவார் அடைந்தவர் வேறே நீவிர். 120. ஊருளே போன மாதோ உரைத்தனள் அவர்க்குச் சாட்சி பாருமென் செய்கை யாவும் பகர்ந்தரென் றுரைக்கக் கேட்ட ஊரிலுள் ளோர நேகர் உயர்விசு வசமே கொண்டார் வாருமென் றழைக்கப் போனார் மகிழ்வொடு மழைத்தே சேர்ந்தார். 121. தங்களோ டேசின் னாட்கள் தங்கவே வேண்டிக் கொண்டார் தங்கினர் நாட்கள் ரண்டே தயவொடே யந்த வூரில் பங்கமில் போத கத்தைப் பரிவொடுங் கேட்டு ணர்ந்தார் அங்கவர் மேல்விஸ் வாசம் வைத்தர நேகம் பேரே. 122. இவர்களம் மாதைப் பார்த்தே யியம்பின ரீதே வார்த்தை அவரைவிஸ் வாசிக் கின்றோம் உனதுரை கேட்டே யல்ல அவருப தேசங் கேட்டோம் அறிந்துளோங் கிறீஸ்தே யென்றே இவர்புவி மீட்பர் என்றே விசுவசித் தேற்றுக் கொண்டோம். II.( 2 ) உத்தியோக ஆரம்பப் பர்வம் முற்றிற்று |