109. அந்தோ தொழுகின் றீரே அறியா திருக்கு மொன்றை அந்தமாய்த் தொழுகின் றேமே அறிந்திருக் கிறதை யேதான் இந்தவோர் விதமா வானேன் இயம்புவேன் நலமாய் நம்பு சந்தமாய் வருமே மீட்பே ஜனமிதே 'யூதர்' மூலம். 110. உண்மையாய்த் தொழுதுகொள்வோர் உனதபி தாவா னோரை உண்மையோ டாவி யோடே தொழுந்தினம் வருமே யுண்மை நன்மையா மந்தக் காலம் நலமொடும் வந்த திப்போ தம்மையே தொழுவோ ரீதாய் இருக்கவே விருப்பங் கொண்டார். 111. ஆவியா யிருக்கின் றாரே அளவிலாக் கடவுள் தாமே ஆவியாங் கடவுள் தம்மை அனுதினந் தொழுவோ ராரோ ஆவியோ டகத்தி லுண்மை யொடுமவர் தொழவே வேண்டும் ஆவியாந் தொழுகை யஃதே விதமென உணர்த்தி னாரே. 112. இன்னுமே யிந்த மாதே இசைத்தனள் உயர்கி றிஸ்தே என்னுமா மேசை யாவே வருவரென் றறிந்துள் ளேனே இந்நிலம் வந்தே யப்போ இவையெலாம் உணர்த்து வாரே "உன்னிடம் பேசும் யானே அவரென உணர்வாய்" என்றார். 113. அத்தரு ணம்வந் தோராம் அவருட சீடர் கண்டார் மெத்தவி யப்புற் றாரே மதிமெலிந் தோராய் நின்றார் எதையோ தேடு கின்றீர் எதுபே சுகின்றீ ரென்றோ அத்தனைக் கேட்கா தங்கே அமைதியாய் நின்றா ரன்னோர். 114. அப்பொழு தஃதே மாதே தன்குடம் அங்கே விட்டே அப்படி யூர்க்குள் ளோடி அங்கறி வித்தே யார்க்கும் செப்பினர் ஒர்வர் யானே செய்தவாம் யாவுந் தானே இப்பொழு தேவந் தீவர் மேசியா தாமோ பாரும். 115. அவளுரை கேட்டோர் யாரும் அவரிடம் விரைந்தே வந்தார் அவர்களே சேரும் முன்னால் அவரது சிஷியர் கிட்டி அவரா காரம் உண்ண அவரை வேண்டி னாரே அவர்யா னுண்ண நீவிர் அறியா உணவுண் டென்றார். |