பக்கம் எண் :

82திரு அவதாரம்

 

123.       "எவனொரு வனுட ஆடொன் றிடறி தித்தினங் குழியினில் விழுந்தால்
              அவனா டதையே யக்குழி யிருந்தே யருளொடு எடுப்பது மிலையோ?
              எவனொரு மனுடன் ஏதொராட் டினுமே எவளவோ சிறந்தவ னறிவீர்
              இவனுக் கிதுநாள் ஈய்ந்துநன் மையே யியற்றுதல் நியாயமென் றறிவீர்"

124.       மனக்கொடு மையினால் மறுமொழி யுரையா மனுடரைச் சுற்றிநோக்கினரே
              சினமிக அவரின் கெடுகுண மறிந்தே திருக்குரு பார்த்தன ரவரை
              மனங்குளிர்ந் தவரம் மனுடனை விளித்தே, "உனதுகை நீட்டென உரைத்தார்
              கனவிசு வசியே கரம்நீட் டவுமே மறுகரம் போலா யினதே.

125.       முறுமுறுத் தனரே பர்சய ரிதனால் மூர்க்கமோ டங்கிருந் தெழுந்தார்
              சுருக்கென விடுத்தே ரோதிய ரொடுமே சூழ்ச்சியெச் தார்கொலை செயவே
              திருக்குரு அறிந்தே சீடரோ டெழுந்தே சென்றனர் கடற்கரை யருகே
              திரள்ஜனங் குழுமி தீவிர மொடுமே சேர்ந்துமே தொடர்ந்தன ரவரை.

126.       தடம்விரி கலிலீ யூதநா டிருந்தும் சாலமென் திருப்பதி யிருந்தும்
              இடங்கொளி துமேயா நாட்டினி லிருந்தும் ஜார்டனக் கரையினி லிருந்தும்
              கடற்கரை துறைகள் திருசீ தனென்கா னானியர் நகர்களி லிருந்தும்
              அடர்ந்துவந் திருந்தார் மாதிரள் ஜனங்கள் அவரது சிறப்பை யறிந்தே

127.       அவரருள் சுகமே யடையவந் தனரே அவதியுள் ளரலகை பிணியால்
              தவறிலா தெவரு மடைந்தனர் சுகமே தயைநிறை பரன்கிரு பையினால்
              அவரிட மிருந்தே புறப்படும் வலமை அனைவருஞ் சுகம்பெறச் செயவே
              அவரைத் தொடவே பிணியரெல் லவரும் அவரிடம் நெருங்கிவந் தனரே.

128.       நெருங்கியே தமையே நெருக்கா திருக்க கரையரு கவற்கணிற் பதற்கே
              திருக்குரு வுரைக்கச் சிஷியரவ் விதமே ஒழுங்குசெய் தனரொரு படவே
              அருட்குரு பரனப் படவினி லிருந்தே யருளினர் சுகமனை வருக்கும்
              திருக்குரு திருஷ்டி படஅல கைகளே திடுமென அவர்பதம் பணிந்ததே.