117. கொடுத்தவ னவனும் புசித்தவ ரவரும் குற்றமுள் ளானவ ரிலையே எடுத்திவர் கதிரை நிமிட்டிய கிரியை எவ்விதங் குற்றமாம் இயம்பும்? தொடுத்தூ ழியமே தொடர்ந்துசெய் குவரே யர்ச்சக ரோய்தின மதிலும் அடுத்துமே புரிந்தும் தெரியுமே யுமக்கே குற்றமுள் ளானவ ரிலையே. 118. தெரிந்துமே கொளுவீ ரிருக்கிறா ரிவணே திவ்யஆ லயத்திலும் பெரியோர் எரிபலி யலவே யிரக்கமே யெமக்கே விருப்பமென் றெழுதிய வுரையின் கருத்தென வெனவே யறிந்துமே யிருந்தால் கடுமன முடையவராய் விளங்கீர்! பெரும்பிழை புரிந்தா ரெனவுரைப் பதுமில் பெருமை யாயுரைப்பது முளதோ? 119. ஓய்வுநா ளினுக்காய் உயர்ந்தனோ மனுடன் உலகினிற் தோன்றிய துளனோ ஓய்வுநா ளதுவே மனுடனுக் கெனவே யிருக்கிற துண்மையே யறிவீர் ஓய்வுநா ளினுக்கும் உரியஆண் டவரே மனுமக னேயென அறிமின் ஓய்வுநா ளினிலே உயிர்களுக் கவஸ்யம் உழைப்பது குற்றமில் அறியும்" 41. சூம்பின கையன் இயேசுவின் கீர்த்திப் பிரத்தாபம். மத். 12 : 9 - 21; மாற். 3 : 1 - 12; லூக். 6 : 6 - 11. 120. திருக்குரு பரனோ ரோய்வுநா ளினிலே சென்றனர் ஜெபவா லயமே இருந்தன னவணோர் சூம்பிய கரத்தோன் போதக யேசுசெய் பொழுதே திருக்குரு பரனார் செய்திடிற் சுகமே குற்றமே பிடிக்கவே யவர்மேல் அருளொடு சுகமே யீய்குவ ரெனவே நோக்கியே யிருக்கஅவ் குளரே. 121. இருதய நினைவே யாவுமே யறிந்தோர் இருந்தஅங் கவீனனைத் தெரிந்தே திருவுள முவந்தே செப்பினர் தயவாய், "எழுந்து நில்லிதுஜனம் நடுவில் திருத்தின மதிலே செய்வது சுகமே நியாயமோ," எனச் சொலிப் பினுமே கிருபை நிறைந்த ஜேசுகேட் டனரே அரியதாம் ஒருவினா அவரை. 122. "நூலதி லிருந்தே நுட்பமா யுரைப்பிர் வினாவிதற் கென்னவோ உரைப்பீர் ஞாலமி திலெதோ ந்யாயமோய் தினத்தில் நலமோ தீதோ புரிதல் சீலமா யுயிரைக் காப்பதோ சினந்தே யழிப்பதோ ந்யாயமே துரைப்பீர்; ஆலமா மனதோர் மோனமா யமர்ந்தார் அறையா தேதுமோர் பதிலே. |