111. "உம்முட சிஷிய ரொருதின மெனிலும் உபவசி யாததேன்" எனவே 'தம்மொடே தரித்தே மணமக னிருக்க உபவசிப் பரோதோ ழருமே அம்மக னவரை விடுத்துநீங் குகையில் அவருப வசிப்பரே நிசமாய்' எம்முட னிவரே யிருக்கஎப் படியாம் உபவசிப் பதோஅவ சியமில். 112. "நவமாம் ரசத்தை நலிந்ததாம் பழைய துருத்தியில் வார்த்துவைப் பவர்யார் நவமாம் ரசமோ பழந்துருத் தியையே கிழிந்ததை நாசமே செயுமே அவமென ஒழியும் துருத்தியும் ரசமும் கிழிந்தே ரசஞ்சிந் தியுமே நவமாம் ரசமோ நவதுருத் திகளி லிருந்தாற் பத்திர மிரண்டும். 113. "பழையதாம் ரசத்தைப் பருகினோ னுடனே விரும்பான் புதியதாம் ரசமே. பழையதாம் ரசமே பருகுதற் குரிய அதிநலம் ரசமெனப் பகர்வான் பழையபோ தகமோ இணைந்தொவ் வுவதில் புதியபோ தகமொடே பரிவாய் பழையபோ தகமே பரிந்துகொண் டவனோ புதியதை விலக்குவான் பகைத்தே. 40. ஓய்வுநாட் போதனை. மத். 12 : 1 - 8; மாற். 2 : 23 - 28; லூக். 6 : 1 - 5. 114. ஓய்வுநா ளதுவாம் முதற்றிருத் தினமே பஷாவினுக் கிருதினங் கழிய ஓய்வுநா ளினிலே நடந்தனர் குருவே சீடரோ டொருபயிற் வழியே கொய்தனர் கதிரைக் கொடும்பசி யதனாற் சீடரே புசித்தனர் நிமிட்டி காய்மனத் தினராம் பரிசயர் சிலபேர் கண்டிதைக் கடுகடுத் தனரே. 115. "செய்கிறா ருமது சீடரோய் தினத்தில் செயத் தகா தாமிது விஷயம் செய்கையே சரியோ சீரிலா ததுவே இதுசரி யல"வெனச் சினந்தார் "மெய்யிதாம் விஷயம் நீர்படித் திலீரோ அபியதார் வேதியன் தினத்தில் மெயிதே தவீது வீரனும் பிறரும் பசியினாற் செய்ததாம் விஷயம். 116. "தெய்வஆ லயக்கூ டாரமே புகுந்தே பணிசெய் அர்ச்சகர் தவிர மெய்யிதே பிறரே யாருமே புசிக்கத் தக்கதில் லெனவிலக் கியதாம் தெய்வசந் நிதியின் அப்பமே விரும்பச் சீலமா யர்ச்சக னருள மெய்ப்புகழ் தவீதும் வேறவன் மனுடர் மிக்கவா வொடுபுசித் தனரே. |