பக்கம் எண் :

புறன

124

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

யைக் குறைவற நடத்திவருநாட்களில், தந்தையார் விருப்பத்திற்கிணங்கி வசிட்டமுனிவர் தங்கையை மணம்புரிந்து அவ்வம்மையார்பால் உபமன்னியரைப்   பெற்றார்.  அப்பால் ஒருநாள் வியாக்கிரபாதமுனிவர் தம்மை ஆண்டருளும் சிவலிங்கப் பெருமான் சன்னிதியில் சிவயோகம்பொருந்தி யிருந்தனர். அப்பொழுதுண்டான அனுபவ ஞானத்தினாலே, சிவபெருமான் தாருகாவனத்தில் நாற்பத்தெண்ணாயிர முனிவர்க்கு மோகத்தை யொழித்து ஆனந்தத் தாண்டவம் செய்தருளியதை அறிந்தார்.  உடனே, அத் திருநடனத்தை யாம் தரிசிக்கப் பெற்றோமில்லையே என்று வருந்தினர்.  பிறகு, தமது தந்தையார் திருவாய்மலர்ந் தருளிய தில்லை மூலத்தானச் சிறப்பைச் சிந்தித்து, இதுவே பொதுவாய்ச் சம்சார வழக்கறுக்கும் அம்பலம் என்பது தெளிந்து, இங்கே சிவபெருமான் தமது திருநிருத்தத்தைத் தரிசிக்கத் தந்தருளுவார் என்று மன அமைதியுற்றுப் பண்டுபோல் அன்புவளர வழிபட்டு வந்தார். இவரிங் கிவ்வாறாக ஆதிசேடர், சிவபெருமான் தாருகாவனத்தில் இயற்றியருளிய திருக்கூத்தை நாராயணனால் அறிந்து, அதைத் தாமும் தரிசிக்க விரும்பித் தவஞ்செய்தார்.  சிவபெருமான் அவர் தவத்துக்கிரங்கி எதிர்ப்பட்டு, ‘தாருகாவனம் பூமி மையமன்றாதலால், ஆண்டு யாம் ஆடிய திருக்கூத்தால் உலகம் அசைந்தது, எமது நடனத்தைப் பொறுக்கக்கூடிய இடம் தில்லை மூலத்தானமே.  அத் தில்லைவனத்தில் வியாக்கிரபாத முனிவனும் உன்னைப்போலவே எமது நடனத்தைத் தரிசிக்க நெடுங்காலமாகத் தவஞ்செய்து வருகின்றான்.  நீ, இவ்வுருவோடு சென்றால் உலகினர் உன்னைக் கண்டு அஞ்சுவர்.  ஆதலின், நீ இவ்வுருவொழித்துப் பதஞ்சலி முனிவனாகச் சென்று அத்தில்லை வனத்தை யடைந்து, ஆண்டு அருந்தவம்செய்யும் வியாக்கிரபாத முனிவனோடு மூலத்தான வெளியில் காத்திரு.  தைப்பூசம் குருவாரத்தோடு பொருந்துகிற சித்தயோக தினத்தில் யாம் அவ்விடத்தில் நீங்கள் தரிசிக்கும்படி ஆனந்த நிருத்தஞ் செய்தருளுவோம்’ என்றருளி மறைந்தனர்.

ஆதிசேடர் அவ்வாறே பதஞ்சலி முனிவராகத் தில்லைவனம்