புறன
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
125 |
நண்ணி வியாக்கிரபாதரைக்
கண்டு அளவளாவி அவரோடு சிவபெருமான் குறித்த இடத்தை நண்ணிக் குறித்த காலத்தை எதிர்பார்த்திருந்தனர்.
நெடுங்காலம் இங்ஙனம் செல்லக் குறித்தநாள் வந்துற்றது. அன்று, இவ்விருவரும், முனிவரர் மூவாயிரரும்,
அரியயன் முதலிய தேவருங் காணச் சிவபெருமான் தில்லைப்பொதுவில் திருநடனஞ் செய்தருளினர்.
செய்யுள்-13.
‘ ஒப்பனை மைப்பரந் தெறிக்கும் விழியினால் உருகி ஒருபுற மளித்த விமலனே ’ என்றதாற்
பெறக்கிடக்கும் வரலாறு : சிவபக்தரான பிருங்கி முனிவர் நாடோறும் சிவபெருமானை வலம்வந்து
வழிபட்டு வணங்கும் நெறியுடையவர். அவர் உமாதேவியை நீக்கிச் சிவபெருமானைமட்டும் வலம்
வருதலைக் கண்ட தேவியார் இறைவனை நோக்கி முனிவர் தம்மை வலம் வராமைக்குக் காரணம் யாதென
வினாவினார். அதற்குச் சிவபெருமான் ‘ இஷ்ட சித்தி பெற விரும்புவோர் உன்னையும் முத்திபெற
விரும்புவோர் என்னையும் வலம் வருவர்’ என்றார். அது கேட்ட உமாதேவியார் சிவபெருமானைப்
பிரியாதிருக்கத் தவஞ்செய்தனர். சிவபெருமான் தேவியார் தவத்துக்கிரங்கித் தமது இடப்பாகத்தை
அளித்தனர்.
செய்யுள்-17.
‘ நாரண னறியாத் திருவுரு ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : ஒரு காலத்தில் அயனும்
மாலும் தாந்தாமே தலைவர் என்று தருக்கி வாதிட்டனர். அப்போது, அவர்கள் தருக்கடக்கத் திருவுளங்கொண்ட
சிவபெருமான் இருவருக்கும் இடையே தோன்றி ‘ எமது அடியையேனும் முடியையேனும் எவர் காண வல்லீரோ,
அவரே தலைவர் ’ என்றருளினர். அது கேட்டு அயன் ‘ யான் முடி காண்பேன் ’ என்று அன்னவுருக்கொண்டு
எழுந்து விண்சென்றும், திருமால் ‘ யான் அடி காண்பேன் ’ என்று வராக உருக்கெண்டு நிலங்கீண்டு சென்றும்
அடி முடி தேடினர். நெடுங்காலந் தேடியும் இருவரில் எவரும் சிவபெருமான் அடியையேனும் முடியையேனும் காணமாட்டாமல்
எய்த்து ஓய்ந்து தம் தருக்கொழிந்தனர்.
செய்யுள்-19.
‘ குறுமுனிபரவ ’ என்றதாற் பெறக்கிடக்கும்
|