புறன
|
126 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
வரலாறு: சிவபெருமானது
திருக்கலியாணச் சிறப்பைக் காண அனைவரும் திரண்டு இமயமலைக்குச் செல்ல, வடதிசை தாழ்ந்தது;
தென்திசை உயர்ந்தது. அதுகண்டு பலரும் வருந்த, சிவபெருமான் அகத்தியரை நோக்கி ‘நீர்தென்றிசையிற் போயிரும். பூமி சமநிலை யாய்விடும்’ என்றனர். அவ்வாணை தாங்கிச்
செல்ல உடன்பட்ட அகத்தியர் ‘சிவபெருமான் மணக்கோலத்தைத் தரிசித்தற் கில்லையே’ என்று
உளம் வருந்தினர். அஃதறிந்த இறைவர் ‘யாம் உமக்குத் தென்றிசையில் வந்து மணக்கோலங்
காட்டுவோம்’ என்று அருளிப் பின்னர் அவ்வாறே செய்தனர்.
செய்யுள்-24.
‘குமரனா லடுஞ் சூர்ப்பகை தடிந்தவன்’ என்றதாற் பெறக்கிடக் கும் வரலாறு : சூரபத்மன்
என்னும் அசுரன் சிவபெருமானைக் குறித்து அருந்தவஞ் செய்து பல வரங்களைப் பெற்றனன்.
அதனால் தருக்குற்று இந்திரன் முதலிய தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அதனைப்
பொறுக்க லாற்றாத தேவர்கள் சிவபெருமானை அடைந்து தமது குறையைச் சொல்லி முறையிட்டனர்.
சிவ பெருமான் அவர்கள் வேண்டுகோட்கு இரங்கிக் குமாரக்கடவுளை உண்டாக்கி அவ் வசுரனைக் கொன்று
வரும்படி அனுப்பினர். குமாரக்கடவுள் சிவகணங் களோடும் பல்லாயிர வீரர்களுடனும் சென்று
சூரபத்மனையும் அவனைச்சேர்ந்த கொடியர்களையும் கொன்றொழித்தனர்.
செய்யுள்-25.
‘ ஒன்றலர் புரம் நீற்று, பெருவை யம்பெனக் கண்ணனை உடையன் ’ என்றதாற் பெறக் கிடக்கும்
வரலாறு : தாரகாசுரனது புத்திரர்களான வித்யுந்மாலிகை, தாரகாக்ஷன், கமலாக்ஷன்
என்னும் அசுரர்கள் மூவர் இருந்த னர். அவர்கள் பெருந்தவஞ் செய்து மயன் என்னும் அசுரத்
தச்சனால், சுவர்க்க மத்திய பாதாளங்களாகிய மூன்றிடங்களிலும், அந்தரத்திற்
சஞ்சரிக்கத் தக்க மூன்று பட்டணங்களை முறையே இரும்பினாலும் வெள்ளியினாலும் கனகத்தினா லும்
பெற்றனர். அவையே முப்புரங்கள். அவற்றின் உதவியால் அவர்கள் தம்மோ டொத்த அசுரர்
பலரையும் உடன் கொண்டு, நினைத்த இடத்திற்குச் சென்று ஆங்காங்குள்ளவரைக் கொன்றும்
வருத்தியும் திரிந்தனர். அவர்களது கொடுமைக் கஞ்
|