பக்கம் எண் :

புறன

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

127

சிய தேவர் முனிவர் முதலாயினோர் சிவபெருமானைச் சரணடைந்து அக் கொடியர்களை அழித்தருள வேண்டினர்.  இறைவனும் அவர்கள் வேண்டு கோட்கிரங்கி, மதியமும் ஞாயிறும் சக்கரங்களாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், பிரமன் சாரதியாவும் அமைந்த பூமியாகிய தேரின்மீது ஆரோகணித்து; மேருவை வில்லாகவும், ஆதிசேடனை அதற்கு நாரியாகவும், அக்கினியை அம்பாகவும், வாயுவை அவ்வம்பின் சிறகாகவும், திருமாலை அம்பின் முனையாகவும் கொண்டு அசுரர் முப்புரங்களையும் அவ்வம்பால் எய்தழிக்கத் திருவுளங் கொண்டனர்.  அப்பொழுது, சிவபெருமான் தமக்குக் கருவிகளாகக் கொண்ட சந்திரன் முதலிய தேவர்கள் ‘ திரிபுரங்களை அழித்தலாகிய இவ்வருஞ்செயல் நம் உதவியாலன்றோ சிவபெருமானுக்கு முற்றுப் பெறப் போகிறது ’ என்றெண்ணி இறுமாப் புற்றனர். சிவபெருமான் அவர்கள் உள்ளக் கிடக்கையை அறிந்து, ‘ என்னே இவர்கள் அறியாமை இருந்தவாறு ! இன்னமும் நமது பேராற்றலை உணராது தருக்கு கின்றனரே.  இவர்களுக்கு நமது ஆற்றல் இனைத்தெனத் தெளிவுறக் காட்டி இவர்கள் தம் சிற்றறிவாற் கொண்ட இறுமாப்பை ஒழிப்பாம்’ எனத் திருவுளங் கொண்டு முப்புரங்களும் அழியவென்று புன்னகை புரிந்தனர்.  அவ்வளவிலே அம் முப்புரங்களும் எரிந்து சாம்பராயின. அவற்றோடு, அவற்றில் வசித்த அசுரரும் நீறா யொழிந்தனர்.  தேவர்களும் தம் தருக்கடங்கினர்.

ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும் சிவனருளாற் சுட்டெரித்தலை விளக்க எழுந்ததென்பர் இவ்வரலாறு.  இதனை,

    ‘அப்பணி செஞ்சடையெம் ஆதி புராதனன்
    முப்புர மழித்தன னென்பர்கள் மூடர்கள் ;
    முப்புர மாவது மும்மல காரியம்
    அப்புர மழிந்தமை யாரறி யாரே ’

எனப்போந்த திருமந்திரத் திருவாக்கும் வலியுறுத்தும்.

    செய்யுள்-27. ‘பாலற்காச் சினத்த காலனை யுதைத்தவன்’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : மிருகண்டுமுனிவர் புத்திரப்