புறன
|
132 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
சொரூபங்கொண் டெழுந்து,
யானைமுக உருவினனான அக் கயாசுரன் மத்தகத்தை மிதித்து, உடலைக் கிழித்துத் தோலை உரித்துப்
போர்வையாகக் கொண்டருளினார்.
செய்யுள்-70.
‘ கவிஞனேவ நள்ளிருட்போதிற் சென்ற தூதனே ’ என்ற தாற் பெறக்கிடக்கும் வரலாறு: சுந்தரமூர்த்தி
நாயனார் திருவாரூரில் பரவைநாச்சி யாரைக் காதலித்து அவரை விவாகஞ் செய்துகொண்ட பிறகு திருவொற்றியூரில்
சங்கிலி நாச்சி யாரை விவாகம் செய்துகொண்டார். அஃதறிந்த பரவையார், மீண்டும் நாயனார்
திருவாரூரில் தம்மை விரும்பிவந்தபோது, ஊடல்கொண்டு அவர் தம்மை அணுகவொட்டாதபடி தடுத்தார்,
அப்பொழுது நாயனார் பரவையின் ஊடலைத் தீர்க்கும்படி தம்பிரானை வேண்ட, சிவபெருமான் ஓர் ஆதிசைவராக
வடிவங்கொண்டு, நள்ளிருளில் பரவையார்பால் இருமுறை சுந்தரருக்குத் தூது சென்று அவள் ஊடலைத் தீர்த்து
இருவரும் கூடி மகிழும்படி செய்தார்.
முற்றிற்று
குறிப்பு:- ஒரு செய்யுளிற்
சுட்டப்பட்ட வரலாறே வேறு பிறசெய்யுட்களினும் சுட்டப்படினும், முதன் முதலாகச்
சுட்டப்பட்ட செய்யுளின் எண்ணால் மட்டுமே அவ்வரலாறு
குறிக்கப் பட்டுள்ளது.
|