புறன
|
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
131 |
தமது அமிசமாகிய
வைரவக்கடவுளை நோக்கினர். அவ்வளவில் வைரவர் பிரமனது ஐந்து சிரங்களில் நடுச்சிரத்தைத்
தமது இடக்கை விரல்நகத்தாற் கொய்தனர். கொய்தசிரம் அவர் விரலோடு ஒட்டிக்கொண்டது.
அப்பொழுது சிவபெருமான் தருமத்தை உலகினர் அறிந்து நடக்கத் தாமே அதை நடத்திக் காட்டத்
திருவுளங்கொண்டு, வைரவரை நோக்கி, ‘ இப் பாவந் தொலையப் பிச்சையெடுத்தல் வேண்டும்’
என்றுகூற, அவரும் அங்ஙனமே அப் பிரம கபாலத்தில் பிச்சை யெடுத்தனர்.
செய்யுள்-54.
‘ அத்திக்கு முன்னம் வரமேயளித்த சருவேச ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு :
முன்னம் ஒரு யானை சீகாளத்தியில் பொன் முகலியாற்றில் நாள்தோறும் நீராடித் துதிக்கையில்
நீர் கொண்டுவந்து சிவபெருமான் திருமுடிமேற்சொரிந்து அருச்சித்து வழிபாடு செய்து வந்தது.
சிவபெருமான், அவ் யானை முன்னமொருகால் கைலையில் தமது தேவியாரது சாபத்தினால்
யானையுருக்கொண்ட அத்தி என்னும் கணநாதன் என்பதுணர்ந்து, தேவியோடு ரிஷபாரூடரா
யெழுந்தருளி அதற்குத் தரிசனந் தந்து முத்தியும் அளித்தருளினர்.
செய்யுள்-59.
‘ கடவாரணத்தி னுரிபோர்வை கொண்ட கருவேச ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு :
கயாசுரன் என்பான் அரிய தவங்கள்செய்து தான் தேவராதியோரையும் வெல்லத்தக்க ஆற்றல்
பெறவேண்டுமென்று பிரமனை வேண்ட, பிரமனும் அவ்வாறே வரம்கொடுத்து
‘ நீ சிவபெருமான் எதிரே செல்லாதே. சென்றால் இவ் வரம் அழியும் ’ என்று எச்சரித்
தனுப்பினர். கயாசுரன் தான்பெற்ற வரத்தால் செருக்குற்றுத் தேவேந்திரன் முதலியவர்களை
வென்று, முனிவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். முனிவர்கள் அவனைக் கண்டு அஞ்சி ஓடி
மணிகர்ணிகை என்னும் ஆலயத்துட்சென்று சிவபெருமானே கதி என்று அவரைச் சரணடைந்
திருந்தார்கள். கயாசுரன் பிரமன் கூறியதை மறந்து, அம் முனிவர்களைத் தொடர்ந்து சென்று,
சிவபெருமான் சன்னிதியில் அவர்கள் இருப்பதை உணர்ந்தும் அவர்களைக் கொல்ல யத்தனித்தான்.
உடனே சிவபெருமான் உக்கிர
|