புறன
|
130 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
விடுமே என்றஞ்சிச்
சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். சிவபெருமான், தமது சடையில் இருந்தால் தக்கன் சாபம்
அதையணுகாதாதலால், அவ்வொரு கலையைத் தமது சடையில் தரித்துக்கொண்டதுமன்றித் தக்கன் சாபத்துக்கு ஒரு பரிகாரமாக, ஒருகலையாய்க் குறைந்த சந்திரன் நாளுக்கொரு
கலையாக வளர்ந்து சோடச கலைகளும் நிறைவுற்றும், ஆனால் அதன்பின்னர் வளர்ந்த முறையே குறைந்தும்
மீண்டும் வளர்ந்தும் இப்படியே என்றும் தேய்ந்தும் வளர்ந்தும் வர அருள்செய்தார். இதனால்
சடையிற்றரிக்கும் சந்திரன் ஒருகலையுடைய பிறைச் சந்திரனே என்பதும் அங்ஙனம் தரிப்பதும்
மறைமதி நாளிலேயே என்பதும் அறிக. (பிறைமதி - பிறந்தமதி-இளமதி. கலைவளர்வது நோக்க அஃது
இளமதியாதல் காண்க. மறைமதிநாள் - அமாவாசை. முழுமதி
நாள் - பௌர்ணமி. வளர்பிறைநாள் - சுக்கிலபட்சம். தேய்பிறைநாள் - அமரபட்சம்.)
செய்யுள்-37.
‘ மால்விடையான் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : தருமதேவதையானது சர்வசங்கார
காலத்தில் பிரமாதி தேவர்களும் மாண்டொழி வார்க ளாதலால், அக் காலத்தில் தான் இறவாதிருக்கும்
பொருட்டு ரிஷபரூபமாகிச் சிவபெருமானை அடைந்து தோத்திரஞ்செய்து தான் என்றும் அழியாதிருக்கத்
தன்னை வாகனமாகக் கொண்டருளுமாறு வேண்டியது. சிவபெருமான் அவ் வேண்டுகோளுக்கு ஒப்பி அதனைத்
தம் வாகனமாகக் கொண்டருளினார். இதுவன்றிச் சிவபெருமான் திரிபுரதகனம் செய்த காலத்தில் திருமால்
அவருக்கு ரிஷபவாகனமாயினர் என்பது மொன்று. ‘ திரிபுரங்க ளவைமூன்றும் தழலெரித்த அந்நாளில்-திருமாலே
இடபமாய்த் தாங்கினன்காண் சாழலோ ’ என்ற திருவாதவூரடிகள் திருவாக்கைக் காண்க.
செய்யுள்-41.
‘முடைத்தலையிற் பலிகொள்ளும் முகலிங்கா’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : முன் ஒருகாலத்தில்
பிரமன் தானே முதற்கடவுள் என்று தருக்க, அத் தருக்கை அடக்கச் சிவபெருமான் பிரமன்முன் தோன்றினர்.
அப்பொழுதும் பிரமன் அவரே தனிமுதல்வர் என்பதை உணராது அவரை இகழ, அவர்.
|