பக்கம் எண் :

புறன

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

129

சரணடைந்தனர். சிவபெருமான், தேவர்களைக் காக்கத் திருவுளங்கொண்டு அவ் விஷத்தைத் தாம் உண்டு தமது கண்டத்தில் நிறுத்திக்கொண்டனர்.

    செய்யுள்-34. ‘ தலைக்கொள் வெண்டலை மாலையன் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : சிவபெருமான் நான்முகனைக் கொண்டு உலகங்களைப் படைத்தும், திருமாலைக்கொண்டு உலகங்களைக் காத்தும், தமது உருத்திராமிசத் தால் உலகங்களை, அழித்தும் முத்தொழிலியற்றும்  முதல்வர்.  ஆதலால், அவரது சங்கார கிருத்தியத்தில் பிரம விஷ்ணுக்களும் அவரவர்க்கு வரையறுத்த கால எல்லையில் மாய்க்கப்படுவார்கள். அப்பொழுது அவர்கள் கொண்டிருந்த தேவசரீரம் புனிதமடைந்து அவர்கள் நற்பேறு பெற வேண்டுமென்ற அருள் நோக்கத்தால் சிவபெருமான் அவர்கள் என்புகளையும் சிரங்களையும் மாலையாகக் கோத்துத் தம் ஆகத்தில் அணிந்துகொள்வர்.  இதனால் சிதாகாசத் திருமேனி யுடைய எம்பெருமான் ‘ வெண்டலை மாலையன் ’ ஆயினர்.

    ‘தண்ணிலா மிலைக்கும் தென்கருவாபுரி வேதியன் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : தக்கன் தன் (தாரகைகளாகிய) புத்திரிகள் இருபத் தெழுவரையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்து ‘நீ இவர்கள் அனைவரை யும் ஒருதன்மையாகப் பாராட்டிக் காதலித்து வாழ்க’ எனக் கூறியிருந்தனன்.  சந்திரனோ, சிறிது கால மவ்வாறிருந்து பின்னர், அவ் விருபத்தேழு மனைவியருள் மிக்க அழகுடையரான கார்த்திகை உரோகினி என்னும் இருவரிடத்துமட்டும் பெருங்காதல்கொண் டொழுகி மற்றையோர் இருபத்தைவரையும் ஏறெடுத்தும் பாராதிருந்தனன்.  அவ் விருபத்தைவரும் அதனால் மிகவும் மனம்வருந்தித் தம் தந்தையாகிய தக்கனிடம் தங் கணவன்செயல் இருந்தவா றிதுவெனச்சொல்லி முறையிட்டனர்.  அதுகேட்டுத் தக்கன் கோபங்கொண்டு, சந்திரனுடைய சோடச கலைகளும் நாளுக்கொன்றாகத் தேய்ந்து ஒழியக்கடவன என்று சாபமிட்டான்.  சந்திரனுக்கு அச் சாபப்படி நாளுக்கொரு கலையாகத் தேயத்தொடங்கி        பதினைந்து கலைகள் தேய்ந்தொழிந்தன.  அதுகண்ட சந்திரன் எஞ்சியுள்ள ஒருகலையும் ஒழிந்து