இருவர்களும் ஸ்ரீ சரபோஜிமகாராஜருக்கு சகலபோக
பாக்கியங்களும் கிடைக்குமாறும் மதனவல்லியின்
இச்சைப் பூர்த்தியாகுமாறும் ஸ்ரீ பிரகதீசரைத்
துதித்துக் கும்பிட்டுச் செல்லுகிறார்கள்.
எல்லோரும் சேர்ந்து பாடுதல்.
___
விருத்தம்.
மன்னுமதி மந்தரத்தாற் றமிழ்க்கடலைக் கடைந்து குற
வஞ்சி யென்னும்
இ்ன்னமுத மதையெடுத்துப் பகர்ந்திடுநா
வேனுங்கரத்தா
லெழிலார் தஞ்சை
யென்னும்நகர் மேவுசர பேந்திரர்க்குப் புலவர்களு
மினிதுட் கொள்ள
நன்னயங்கொ ளொண் புரத்தில்வளர் சிவக்கொழுந்து
நல்கினானே.
___
மங்களம்.
___
ராகம் - சுருட்டி] பல்லவி. [தாளம் - ஆதி
மங்களம் சரபேந்திரர்க்கு ஜய மங்கள்
சரணங்கள்.
புகழ்சோழ தேசருக்குப் போசலகு லேசருக்குச்
சகலருக்கும் நேசருக்குத் தஞ்சைநகர் வாசருக்கு (மங்களம்)
சித்தபரி சுத்தருக்குத் தேறுசிவ பத்தருக்குச்
சத்துவகு ணத்தவருக்குத் தண்மதிமு கத்தருக்கு (மங்களம்)
நிலைமதிவி சாலருக்கு நீடுறுசெங் கோலருக்குத்
தலமதனின் மேலருக்குச் சரபபூபாலருக்கு (மங்களம்)
___
ஸ்ரீ சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் முற்றிற்று.
___
|