சிங்கி:- சரபோஜி மன்னரருண்முத்து மாலையடா சிங்கா
சிங்கன்:- புதுமதி நெற்றியிற் பூனைக்கண்ணிருப் பானேன்
சிங்கி-அது
சிங்கி:- மதனவல்லி யீந்த வைடூரியச் சுட்டியடா சிங்கா
சிங்கன்:- பாம்புரி தன்னை யிடையி லுடுப்பானேன் சிங்கி-அது
சிங்கி:- பாம்புரி யோமணிப் பட்டிகை யல்லவோ சிங்கா
சிங்கன்:- அடிமை வேலையிட் டாள்வதெப் போதடி
சிங்கி-மெத்தத்
சிங்கி:- துடியாதே நானதற்குச் சொன்னேனே யல்லென்று
சிங்கா
சிங்கன்:- பந்து பிடிக்கக்கை பதைக்குது பாரடி சிங்கி-நீ
சிங்கி:- விந்தைபே சுவையென்னின் மேலா யிருப்பேனான்
சிங்கா
சிங்கன்:- காமவே டன்கையிற் காட்டிக் கொடுக்காதே சிங்கி-என்றும்
சிங்கி:- நாமிரு வருங்கூடி நயந்து வாழ் வோமடா சிங்கா
சிங்கன்:- குலவுஞ் சரபோஜி மகராஜர் தமை வாழ்த்திக்
கொண்டிங் கிருப்பமடி சிங்கி-இங்கு
சிங்கி:- நலதிப் படியேநாம் செய் தாலவர்தயை நமக்குக்
கிடைக்குமடா சிங்கா
சிங்கன்:- அவர் சுகமாக விருக்கப் பிரகதீச ரருட்பதம்
போற்றுவோம் சிங்கி-இந்த
சிங்கி:- அவனியி லெவர்களுஞ் சுகமே யிருக்கணு மவர்பதம்
போற்றுவோம் சிங்கா
___ |