பக்கம் எண் :

71

   சிங்கி:- எங்கெங்குத் தேடினை யெனக்கின் றுரையடா-சிங்கா
   சிங்கன்:- ஆலங் குடிகண் டிக்குடி தேடினேன் சிங்கி-கூறும்
   சிங்கி:- அம்பலந் தேட வறிவுனக் கில்லையே சிங்கா
   சிங்கன்:- வலம்புரிக் களம்பார்க்கத் தினங்குறித் தலையுற்றேன்
                                                     சிங்கி-அடா
   சிங்கி:- மற்றதல்லா லுரத்து வல்லநீ தேடலையோ சிங்கா
   சிங்கன்:- வன்னக்குற் றால வயினுறத் தேடினேன்
                                                    சிங்கி-அன்று
   சிங்கி:- மன்னு மியலுறு மாயூரந் தேடலையோ சிங்கா
   சிங்கன்:- இலங்கிய காஞ்சி யிடைமிகத் தேடினேன்
                                                     சிங்கி-நல்ல
   சிங்கி:- இசைதரு நாகைதே டெண்ணமாங் கில்லையோ சிங்கா
   சிங்கன்:- கூடலூ ருக்குமேற் கூடவுந் தேடினேன் சிங்கி-நான்
   சிங்கி:- கூடவிருந்திட்டாற் குறித்ததை தேடாயோ சிங்கா
   சிங்கன்:- தஞ்சையைப் பாரென்று சகலருஞ் சொன்னார்கள்
                                                    சிங்கி-இங்கே
   சிங்கி:- சாற்றுங் குறிசொல்லித் தனந்தேட வந்தேனடா சிங்கா
   சிங்கன்:- உனக்குள்ள தனந்தான்மே லெனக்கு முதவலாமே
                                                     சிங்கி-அடா
   சிங்கி:- ஊரார் தனத்தினுக் கேனித் தனையாசை சிங்கா
   சிங்கன்:- மறுதுணை யில்லாமற் றனியே வரலாமோ
                                                    சிங்கி-பாரில்
   சிங்கி:- பிறைநுத லார்க்குத்தந் நிறைதானே துணையன்றோ சிங்கா
   சிங்கன்:- இருதனமேலு மிலுப்பைப்பூ வருவானேன்
                                                      சிங்கி-அது