பக்கம் எண் :

70

வேறொரு குளுவன் பிரவேசித்தல். குறச்சிங்கி அங்கே
யிருக்கிறாளென்று குறவனுக்குச் சொல்லுகிறாள்.

___

எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

             தரியலரை வென்றுபுவி யாளு மெங்கள்
                 சரபோஜி மன்னவர்தென் றஞ்சை யுற்றோர்
             பெரியதல மருவிமண மகிழ்ச்சி நீடு
                 பெற்றிடுவா ரின்னதுதான் சித்தமாகும்
             உரியவித னாலிந்த நகரை நீயு
                 முற்றனையே பெற்றிடுவை யுறுதியாயுன்
             கரியமலர்க் கோதையதோ நிற்கின் றாள்பார்
                 கருதுவரைக் குறமகனே யணுகித்தானே

___
சிங்கனும் குறவனும் பேசிக்கொண்டே வர வழியில்
சிங்கியை சந்திக்கிறார்கள்.

___
ஆசிரிய விருத்தம்.

         தாரணி புகழுந் தஞ்சைச் சரபோஜி மன்னர் நாட்டில்
         கூரணி நெடுவேற் சிங்கன் குறச்சிங்கி தன்னைக் கண்டான்
         வாரணி தனத்தினாளை மற்றவன் சிலமுன்கேட்க
         ஏரணி மாதுங்கேட்க விருவருங் கூறுவாரே

___
சிங்கனும் சிங்கியும் சரசமாக பேசிக்கொள்ளுகிறார்கள்
___
சிங்கனும் சிங்கியும் உரையாடல்.
பாட்டு.

 ராகம்-முகாரி]            கண்ணிகள்.            [தாளம்-திச்ரம்

    

       சிங்கன்:- எந்தத் தேசம் விட்டெந்தத் தேசம்வந்தாய் சிங்கி-மேல்