மேயவுலகெங்கு மோர்நொடி தனிற்சென்று
விரைவில் வரவொரு குளிகை தருகிறேன்
தூய நகைமட மாதர் தொடர்ந்திடத்
தூவும் படிவாடைப் பொடியொன்று தருகிறேன்
பேயொடு பூதங்க ளேவியது செய்யப்
பிறங்கொரு மந்திரஞ் சொல்லித்தருகிறேன்
(காட்டி)
காற்றைப் பிடித்துக் கரகத் தடைப்பதுங்
கண்கட்டு வித்தையுங் காட்டித்தருகிறேன்
ஆற்றல்கொ ளக்கினித் தம்பஞ் சலத்தம்ப
மாகரு டணம்வசியஞ் சொல்லித் தருகிறேன்
ஏற்றிடு மூப்பினர் சிறுபிள்ளை களாகி
யிலங்யிட மூலிகை யிருக்குது தருகிறேன்
மாற்றற் கரிய பிணிகளை மாற்றிட
மணியொ ன்றிருக்கிற ததுவுந் தருகிறேன்
(காட்டி)
பகர்ந்திடும் பேச்சினிற் பிறர்பொரு ளினைத்தெட்டிப்
பறிக்கும் படியொரு நரிக்கொம்பு தருகிறேன்
இகலு மிரும்பினைப் பொன்னாக்கிக் கொள்ளலாம்
இதற்கொரு பச்சிலை யுனக்குத் தருகிறேன்
திகழிங் கொருவர்தம் மனத்தெண் ணினவெல்லாம்
தெரிந்து சொலும்வித்தை பரிந்து தருகிறேன்
தகுமிவை யெல்லாநீ யுணர்ந்துகொண் டாலுன்னைச்
சரபோஜி மன்னர் புகழ்ந்துகொள் வார்மெத்தக்
(காட்டி)
___
|