குடக்கி னுயர்நேரி யடுக்க லிடையென்னை
நிறுத்தி யவளிந்த நெறிக்கண் வந்தாள் சொல்லக்
(கேளடையே)
___
சிங்கியைக் காட்டுவதாகக் குளுவன் சொல்லும்
வெண்பா.
___
சொன்னவடை யாளந் துலங்கவந்தித் தஞ்சையினோர்
கன்னி யிருக்கின்றாள் காட்டுகின்றேன்-அன்னவளைக்
காட்டினா லேயெனநீ கைக்கூலி தந்திடுவாய்
ஈட்டமுறச் சிங்கா வெனக்கு
___
சிங்கன் குளுவனிடம் சிங்கியிருக்குமிடத்தைக் காட்டும்
படியாக வருந்திக் கேட்டுக்கொள்ளல்.
___
ராகம்-நாதநாமக்கிரியை] [தாளம்-திச்ரம்
பல்லவி.
காட்டி விடையே சிங்கியைக்
காட்டி விடையே
அனுபல்லவி.
நாட்டி லுயர்சோழ நாடு புரந்திடும்
நரபதி சரபோஜி மகராஜர் நகரினில் (காட்டி)
சரணங்கள்
ஆயிரம் பெண்களைக் கூடினா லுங்காமம்
அடங்கா திருக்க மருந்து தருகிறேன்
|