சிங்கன் சிங்கியின் அடையாளங் கூறுதல்.
___
ராகம் - சுருட்டி] பல்லவி. [தாளம் - திச்ரம்
கேளடையே சிங்கிக் கடையாளம்
கேளடையே
அனுபல்லவி.
நாளுமுல காளுஞ்சர போஜி மகராஜர்
நண்ணுமுயர் தஞ்சை யென்னும் நகரிடை
(கேளடையே)
சரணங்கள்.
கன்னமதி யிலேயிரண்டு சின்னவடு வுண்டு
கள்குடித்த வெறியினானான் கடித்ததுண்டு பண்டு
வன்னமுலை நன்னயங்கொள் சொன்னமலர்ச் செண்டு
வாயமுதம் பால்கனிதேன் சீனியொடு கண்டு
மன்னு மனநடை யன்ன நடையளொரு
மின்னு மினையலவே யென்று நடையளின்னம் (கேள)
வதனஞ்செந் தாமரையின் போதெனவே கூடும்
வண்டினங்கள் போல்விழிகள் காதினள வோடும்
எதிர்வோர்கண் மனமேறிக் காதூச லாடும்
ஏற்றகுமிழ் மூக்கினெழில் பார்க்கினிகந் தோடும்
இன்ப மொருவுருக் கொண்டதி வள்வடி
வென்று மனிதர்கள் கண்டுசொல்லுவர் நன்றாய்
(கேளடையே)
கறுத்த குமரியென்மேல் மெத்தவிசு வாசி
கனத்தனைமுன் பழித்ததையந் தரத்தில்விட்ட கேசி
குறித்துணர்ந்த திறத்தினர்கள் போற்றுசர போசி
குரிசிலுயர் தஞ்சைகண்டு வருவனென்று பேசு
|