பக்கம் எண் :

66

     இன்றைக் கெல்லாமவ ளழகைப் பார்த்துக்கொண்டிருக்
         காலஞ்சற்றும் பசியாது-மேலும்
     என்று மவள்வடிவைக் கண்டோர் தமக்-குரம்பை
         யெழிலு மனத்துக்கு ருசியாது-இளந்

     தென்றல் புலிபோலப் பாயுதே-வானில்
     திங்கள் செங்கதிர் போலக் காயுதே-கடல்
     திரையோசை யுயிரெங்கென் றாயுதே-அன்றிற்
     சிறுபுட்கள் பெடையோடு மேயுதே-ஐயே
     தேசாதே சம்போனேன் றேடியலைந்துங் காணேன்
     சின்னஞ் சிறியாள்-நலன்
     எண்ணு நெறியாள்-புற
     நண்ணி யறியாள்-எங்கே
     சென்று தியங்கினாளோ வெங்கே நின்று
     மயங்கினாளோ அந்தே                              (வஞ்சியை)

___
குறவன் சிங்கனைக் குறத்தியின் அடையாளம்
வினாவுதல்.

___

எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

     திறத்தினுயர் சரபோஜி மன்னன் றஞ்சைத்
     திருநாட்டில் யாவர்களுஞ் செல்வ மிக்கோர்
     மறத்தடங்கண் மாதரெல்லா மணிகளாலும்
     வடிவாலுந் திருமகளை நிகர்வர் கண்டாய்
     நிறத்தனிவேல் பிடித்திடுகைக் குறவா விங்கே
     நிலைபெறவே வுருவாதி யின்ன வென்றுன்
     குறத்திதனக் கடையாள முரைத்தா னான்மேற்
     கூறலா நீ கண்டு சேரலாமே