பக்கம் எண் :

65

சரணங்கள்.

     தாளத் தனத்தைப் பார்க்க மேலே கலையைநீக்கச்
         சற்றே தொடுவே னாசை கொண்டு-கையைத்
     தள்ளிவிடு வாளொரு கிள்ளுமிடு வாள்கன்னந்
         தன்னிலவள் பின்னுமது கண்டு-அவள்
     வாள்விழியால் மதனுக் கென்னைக் காட்டுவாள்-அவன்
         வன்கணையி னாலுடலை வாட்டுவாள் காம
     வன்னிதனை முன்னியெழ மூட்டுவாள்-கிட்ட
         வாவெனச்செவ் வாய் மலர்த்தே னூட்டுவாள்-அந்த

     வங்கணச் சிங்கிதன் கொங்கைத் துணை-யெண்ணி
     மனமீங்                      குருகுது-தரு
     மயலோ                      பெருகுது-ஒரு
     வகையாய்                     வருகுது-பஞ்ச
     வன்னக் கிளியையின்சொ லன்னப் பெடையை யென்றன்    (வஞ்சியை)

     பந்துவராளிபுன் னாகவராளி
         பைரவி தோடியிற் பாடுவாள்-பின்பு
     பரிவுதர வெழுந்து தெரிவுபெற மகிழ்ந்து
         பழகு முபரியிற் கூடுவாள்-மிக
     விந்தைவிந்தை யாகப் பேச்சுப் படிப்பாள்-கொம்பின்
         மேவுமயில் போற்சுழன்று நடிப்பாள்-என்கை
     வெள்ளிலைவாய் கொள்ளத்துடி துடிப்பாள்-சுரத
         வித்தையினை முற்றுமங்கே முடிப்பாள்-ஐயே

     மெய்யாகச் சொல்லுறேனந்த வொய்யாரக்-காரிமதன்
     மின்னின்                    மிஞ்சுவாள்-மருவப்
     பின்னுங்                     கெஞ்சுவாள்-இந்த
     வண்ணங்                    கொஞ்சுவாள்-மானின்
     மிகவுங் குதிப்பள்பேணித் தகவுந் துதிப்பளந்த            (வஞ்சியை)