சிங்கன் கொச்சகக் கலிப்பா.
___
பரிக்குலஞ்சூழ் சேனையினான் பார்மே லுயர்கீர்த்தி
விரித்தசர போஜிமன் னன்மேவுதஞ்சை தன்னிடைநான்
வரித்தடங்கண் சிங்கி மணிமார் பிடத்திற் கொண்டுதினம்
தரிக்குமொரு பூணாகிற் றனத்தை விட்டுப் பிரியேனே
___
உடன் சிங்கன் விருத்தம்.
___
நாடு புரக்குமெங்கள் சரபோஜி நரேந்திரன்றன்
நீடுபுகழ்த் தஞ்சை நெடுநகரிற் சிங்கிதனைத்
தேடி யலைவேனோ செப்புமவ ளேந்துகுறக்
கூடைவடி வாயிருந்தாற் கூடவே வருவேனே
___
குறத்தி காணாததினால் குறவன் வருந்திப் புலம்பல்.
___
ராகம் - கன்னடம்] பல்லவி. [தாளம் - திச்ரம்
வஞ்சியைக் காணேனே ஐயேகுற
வஞ்சியைக் காணேனே
அனுபல்லவி.
மஞ்சுலவுஞ் சோலைகளும் வான்மதிலுஞ் சூழுமுயர்
தஞ்சைநகர் வாழுமெங்கள் சரபோஜி மன்னர் நாட்டில்
சட்டெனவே ளிட்டகல கத்திலென்னை விட்டகன்ற (வஞ்சியை)
|