வருமிக் குருவியைத் தஞ்சைச் சரபோஜி
மகராஜ னுக்கீந்தால் வெகுமானம் வாங்கலாம் (கூப்)
___
குளுவன் சிங்கனிடம் கூறல்.
___
எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
காவென்றுங் கீயென்றுங் குக்கூவென்றுங்
ககவென்றுங் கிகியென்றுங் கக்கோவென்றும்
கூவிக்கொண்டிருந்த வெல்லாஞ் சும்மா விங்கே
குந்தியிரு நாங்கள் போய் வருவோ மென்று
போவதுபா ருணைநாப்புக் காட்டி நீயிப்
போதுபக்கி பிடித்ததினிப் போதுமுன்றன்
அவியன்ன சிங்கிதனைத் தேடு சிங்கா
வண்ணல்சர போஜிதஞ்சை யணுகித்தானே
___
சிங்கன் சிங்கியை நினைத்து வருந்துதல்.
___
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
மறந்து விட்டேன் சிங்கிதனை
மன்னும் அனையாள் முலைகாட்டும்
நிறங்கொ ணேமிப் புள்ளினங்கா
ணிலவு நடைகாட் டனக்குலங்காள்
திறங்கொண் மொழியைக் காட்டுகிளித்
திரள்கா டஞ்சை நகரினிடைச்
சிறந்தி டவளை யெதிர்கண்டாற்
சேர லாநீர் சொல்வீரே
---
|