சரணங்கள்.
பரந்த சிறைப்பெருங் கம்புள் வருகுது
பச்சைப் புறாவிலொரு லெச்சம் வருகுது
கருங்குயில் வருகுது நெருங்கிடும் கவுதாரி
கள்ளத் தனங்கொண்டு மெள்ளப் பதுங்குது (கூப்)
செந்தமி ழிலக்கணந் தெரியார் கவிசொல்லிச்
சேரு மதன்குற்றந் தெரிந்தோர் வினவுங்கால்
சிந்தைமயங்கி விழித்தல்போற் கண்ணியில்
சிக்கிக்கொண் டிங்கொரு பக்கி விழிக்குத்து (கூப்)
மாடப் புறாவோடு காடையுங் கலவிசெய்
மாதர் களத்தொலி போலவே கூவிக்கொண்
டோடி வருகுது நாய்களைத் தூரவே
ஒதுங்கவைத் திடுநீயும் பதுங்கி யிருந்திடு (கூப்)
கொக்குக் கறியினிப்புச் சற்று மறியாயே
கூறிய சேலத்துச் சர்க்கரை போலுரு
சிக்கும் வயிறு பசிக்குது மெள்ளவந்து
சிக்கிக்கொண் டாலதுனக் கித்தனை தாரேன் (கூப்)
சாக்கிர மாதியைந் திடத்துஞ் சிலசில
தத்துவத் தோடுயிர் சாரத் திரிதல்போல்
தேக்கிடு மங்கங்கே சிலபக்கி கணிற்கத்
திகழொடு குஞ்சுடன் வருகுதொரு பக்கி (கூப்)
ஆங்காரந் தன்னை யடக்கிப் புலனைவென்
றகத்தைப் பரத்தி னிடத்தி னிறுத்தியே
தூங்காமற் தூங்கிடு மாங்கவர் போலவே
தூயவொரு நாரை யோய்வுற் றிருக்குது (கூப்)
ஒருவன்பல் வகைச்சொற்க ளுரைப்பதெனப் புட்கள்
ஒலிவகை யெலாங்கூவுங் குருவி வருகுது
|