நாடுங் கயவரை யாளு மறிவினோர்
நடுத்தர மாக விடுத்து வருதல்போல்
நீடுங்கண் ணியைமிக விரியாமற் குவியாமல்
நேராகக் குத்தடா குளுவா (கண்ணி)
பாவத் தொழிலவன் பிறரையுந் தனைச் சேரப்
பண்ணுந் திறமெனப் புள்ளின மெலாந்தன்போல்
காவற் படச்செய்யுந் தீவக் குருவியைக்
கண்ணிக்குள் வைத்திடு குளுவா
பூவுல கந்தனை யாளு முயர்சர
போஜி யெனுமக ராஜன் மகிழ்வொடு
மேவுந்தென் றஞ்சை நகர்ப்புறத் தேயொரு
வேடிக்கை பார்ப்பமடா குளுவா (கண்ணி)
___
கண்ணிக்குள்ளே வருகிற பறவைகள் குளுவன்
பேசுகிறதைக்கண்டு கலைந்து போகின்றன வென்று
அவனை இறையாதேயென்று பறவைகள்
மேய்வதும் போவதும் தோன்றும்
படி குறவன் சொல்லுகிறான்.
___
ராகம்-பூரிகல்யாணி] பல்லவி. [தாளம்-திச்ரம்
கூப்பிடாதையே பொறு பொறு
கூப்பிடாதையே ஐயே
அனுபல்லவி.
காப்புறு தாஸ்தான்ம ஹால்பெருந் தொட்டத்தில்
கவின்மயில் வருகுது குமரற்கு விடலாகும் (கூப்)
|