சிங்கன் தன்னுடைய தோழனாகிய குளுவனைப்
பார்த்துப் பறவை வேட்டைக் குரிய கண்ணி
குத்தச் சொல்லுகிறான்.
___
சிங்கன் பாட்டு.
ராகம்-அமிர்தகல்யாணி] பல்லவி. [தாளம்-திச்ரம்
கண்ணி குத்தடா குளுவா வகையாக்
கண்ணி குத்தடா
அனுபல்லவி.
எண்ணிய பறவைகள் சிக்கினாற் பிரகதீசர்
இளைய பிள்ளையா ரேறித்திருந்திட
வண்ண மயிலொன்று விடுவோ மெனநன்றாய்
மனத்திற் றிடமாகக் குறித்துக்கொண்டீங்கேநீ (கண்ணி)
சரணங்கள்.
காலினின் மாட்டிய கண்ணியைப் பக்கிகள்
கடித்துத் தகர்த்திடு மப்பால்
மேலிற் கழுத்தினின் மாட்டிக்கொண் டாற்காலால்
மெல்ல விழுத்திடுங் குளுவா
சாலைத்திருடர்கள் காலினுங் கையினுஞ்
சாற்றுந் தொழுக்கட்டை மாட்டிவிட்டாற்போலக்
காலினுங் கழுத்தினு மாட்டிக் கொள்ளும்படி
கருதிக் குத்தடா குளுவா (கண்ணி)
ஊடுறக் கண்ணியை விரித்துவைத் தானுழைந்
தோடிப் போமடா பக்கி
வாடுறக் கண்ணியைச் சுருக்கிவைத் தாற்றலை
மாட்டிக்கொள் ளாதடா குளுவா
|