அனுபல்லவி,
மங்களம் பெருகிடுந் தஞ்சைநன் னகரின்
மருவுஞ் சரபோஜி மகராஜர் நாட்டினில் (சிங்கன்)
சரணங்கள்.
கையினி லீட்டி யெடுத்துக்கொண்டு-நல்ல
காவிச் சல்லடந் தொடுத்துக்கொண்டு
மெய்யினில் வெண்ணீறு பூசிக்கொண்டு-வெகு
வேடிக்கை யாகப் பேசிக்கொண்டு (சிங்கன்)
வெறிக்கச் சிலர்களை யுறுக்கிக் கொண்டு-நீடு
மேன்மீசை தன்னை முறுக்கிக்கொண்டு
நெறிக்குட் பறவைமே னாட்ட மோடு-எதிர்
நேரு மதன்மீது வேட்டமோடு (சிங்கன்)
கொங்கொடு பாண்டிய மெங்கு மலைந்து-நறுங்
கொங்கலர் குந்தள மெங்கு மிலைந்து
பங்கமில் பூவணை தங்கிமுன் கூடி-மிக
இங்கித மேதருஞ் சிங்கியைத்தேடி (சிங்கன்)
விருத்தம்.
இந்தவகை வந்தகுறச் சிங்கன் பூமிக்
கிந்திரனா மெங்கள்சர போஜி மன்னன்
சந்ததமுங் கொண்டலெனச் செம்பொன்மாரி
தனையுற்றோர் கொளப்பொழிந்து மகிழ்ந்து வாழும்
சுந்தரமார் தஞ்சைநகர்ப் புறத்தி னீடித்
தொகு பறவைக் குலங்கண்டு வேட்டையாடப்
பந்தமுறு குளுவனைப்பார்த் திங்கே கண்ணி
பாச்சென்றா னவனுமிதோ வரச்சென்றானே
___
|