பக்கம் எண் :

58

காட்சி-VI.
குறத்தியாகிய சிங்கியைத் தேடிக்கொண்டு அவள்
புருஷனான குறச்சிங்கனும் அவன் தோழன்
குளுவனும் வருகிறார்கள்.

___
குளுவன் விருத்தம்.

         நீடானைச் செவியனொடு குதிரை வாலன்
             நிகழ்த்துபுலி வாயனென்னும் நாய்கள் பக்கத்
         தோடாமற் புலனையடக் குணந்தோர் போல
             வொருவழியாய் வரக்கூவிக் கொண்டு பின்னும்
         ஈடான கண்ணிவலை தடங்கை யிற்கொண்
             டிசைகுளுவ னொடுசிங்கன் வந்தான் சோழ
         நாடாளுந் சரபோஜி மன்னர் தஞ்சை
             நகர்புறத்திற் சிங்கிதனை நாடித்தானே.

___
சிங்கனைப்பற்றிக் குளுவன் வர்ணித்தல்.
___
குளுவன் பாட்டு.

 ராகம் - மத்யமாவதி]         பல்லவி.         [தாளம் - திச்ரம்

        

         சிங்கன் வந்தானே மலைக்குறச்
         சிங்கன் வந்தானே

தீர்மானம்.

         தோதிந்த, தக்க, தோதிந்த, தத்தோம், தத்தோம், தொங்கா
         தகதோம் தொங்கா, தத்தோங்கா, தகதோங்கா
         தளாங்குதோம், ததிங்கிணதோம்.