பக்கம் எண் :

57

குறத்தி கூற்று.

      கஞ்சமல ரானனத்தாய் குறிநான் சொல்வ தோவென்
      கருத்திலிருந் துரைக்கின்றா ளெக்கலா தேவி
      தஞ்சைநகர் தனில்வாழ்வோ னுலகத்தை யாள்வோன்
      சரபோஜி மன்னவனா மன்னவன் பேரம்மே
      நிறைசெல்வத் தன்னவன்மே லாசைகொள்ள நோற்று
      நீமுன்பு செய்ததொரு புண்ணியங்காண் பாயே
      பிறைநுதலா யினியெனக்கு நீமறைக்க வேண்டாம்
      பெருவுடையா ரருளதனா லவனைச்சேர் வாயே
      நறைமலர்த்தா ருடன்றூது வந்திடுமின் றென்ன
      நவின்றனளம் மதனவல்லி நாணுடனே கேட்டே
      உருமகிழ்ச்சி கொண்டுமணிப் பணிகளுடன் மற்றும்
      உற்றகலை நல்கவவள் பெற்றிறைஞ்சி னாளே.

___
குறத்திசொன்ன குறிகளைக்கேட்டு மதனவல்லி
மனமகிழ்ந்து அவளுக்கு சன்மானங்கள் கொடுத்து
மனமகிழச் செய்கிறாள்.

___

     குறத்தி வசனம்:- ஏ அம்மே நீ நினைச்சபடி பிரகதீசரருளாலே அந்த
 மவராசா அருள் உனக்கு கிடைக்கும். கவலைப்படாதே.

விருத்தம்.

      நறுமலர்த் தாறுடன் றூது நலமுடனே யிப்போது
      வருமெனவே மதனவல்லி மாதுரைக்க உறுமகிழ்ச்சி
      கொண்டுமனம் நாணிகலை குறைவில்லா மணியீயக்
      கண்டுமகிழ் கொண்டிட்டாள் காண்

குறத்தியும் மோகினியும் செல்லுகிறார்கள்.
காட்சி முடிவு.

___