பக்கம் எண் :

56

மதனவல்லி கூற்று.

     என்னடீ மலைக்குறத்தி குறிசொன்னாள் முன்னம்
     இசைத்துவந்த படிமுற்று மிசைக்கவேண்டு மல்லோ
     சொன்னவழி தன்னைவிட்டு வேறொன்றை யிங்கே
     தொடுத்துக்கொண்டா யதற்குளென்ன நினைத்துக் கொண்டா யோடீ
     வன்னமத யானையைமுன் கண்டறியே னோங்கு
     மதயானை கண்டவரை மதியமுங் காய்ந் திடுமோ
     இன்னுலவை சீறிடுமோ சிலைமதனன் போருக்
     கிசைந்திடுமோ பாலமுது கசந்துவிடு மோடீ

குறத்தி கூற்று

     உள்ளபடி சொல்லுகிறேன் பெண்ணரசே யந்த
     ஓங்குமத யானையின்மே லாங்கிருந் திசைந்த
     வள்ளலினைக் கண்டுளத்தி லாசை கொண்டாய் கொண்ட
     வண்மையினா னண்ணியதிவ் வுண்மயக்க மம்மே
     கொள்ளுமிந்த வகையெல்லா முன்னுனக்கே யெண்ணிக்
     குறித்துரைத்தான் முனிவையென்று மரைத்துரைத்தேன் மின்னே
     விள்ளுமிந்த வெதுப்பு மெய்யிற் கண்டதவு மிதனா
     வேறொன்று மில்லையது கூறினேன்கே ளம்மே

மதனவல்லி கூற்று.

     குஞ்சரத்தி லெவரேனு மேறிச்சென்றா லாசை
     கொள்ளுவனோ வப்படிநீ கொண்டதுண்டே கொல்லு
     வஞ்சியிங்கே வாய்த்துடுக்கான மிஞ்சிப்பேசாதொன்றும்
     மற்றவன்றா னெந்தவூர வன்பேரென்னேடி