பக்கம் எண் :

55

ராகம்-பைரவி

         முந்துதெய் வங்களை முன்னிய வகையோ
         காசோ பணமோ கனகமோ வெள்ளியோ
         மாசிலாப் பவழமோ வைரமோ முத்தோ
         மாலையோ பணியோ மரமோ கொடிகளோ
         சேலையோ கனியோ திருமணச் செய்தியோ

ராகம்-கல்யாணி.

         நாலூகாற் சீவனோ நரர்களோ பறவையோ
         கொடுத்திடுங் குறிப்போ கொள்வதற் கெண்ணமோ
         வாகைவே லரசர் வரவிடுந் தூதோ
         தோகைதா னவர்பாற் றொடர்ந்திடுஞ் செய்கையோ
         இன்ன தென்னவே யெடுத்து
         மன்னுற நான்சொல வகுத்தருள் வீரே

___

குறத்தியும் மதனவல்லியும் பேசிக்கொள்ளுதல்.
மோகினி மனக்குறிப்பு குறத்தி சொல்லுகிறாள்

___

 ராகம்-எதுகுலகாம்போதி]       கண்ணிகள்.       [தாளம்-திச்ரம்

குறத்தி கூற்று.

     அன்னநடை யாயெழில்கொண் மாமயிலே மின்னே
     அம்புயத்தின் மேல்வளர் கும்பமுலைப் பொன்னே
     கன்னிகையே சிற்றிடையே பைங்கிளியே மேலுன்
     கருத்திலொரு கவலையுண்ட துரைத்திடுவே னம்மே
     துன்னுமத யானைமேலோர் மன்னவன்றான் சேனை
     சூழநெடு வீதிதனிற் றோகையர்க ளுடனீ
     மன்னிவிளை யாடிடுங்காற் பவனிவந்தான் வந்த
     மதயானை தனைக்கண்டு மருண்டனைநீ யம்மே