பக்கம் எண் :

54

         கனத்திடு கீர்த்திச் சரபோசி மன்னர்
             கவின்பெறுந் தஞ்சை மாநகரில்
         அனப்பெடை போல வருகுறக் கொடியே
             யகத்துநான் குறித்த தோர்ந் திசையே

___
குறத்தி தெய்வங்களை வேண்டுதல்.
நேரிசை ஆசிரியப்பா.

___

ராகம்-தோடி.

         தலமிது புரந்திடுஞ் சரபோஜி மன்னர்
         நலனுறு மதிகொடு நாளும் பணிந்திடச்
         சுத்தமார் தஞ்சைத் தொல்பெரும் பதியில்
         உத்தம வாலயத் துறை பெருவுடையாய்
         பிறைநுதற் சிற்றிடைப் பெரியநாயகியே

ராகம்-காம்போதி.

         நிறைமலர்க் கோதை நிமலிகா மாட்சி
         தென்றிரு வீதி திகழ்ந்திடுங் காளி
         வென்றிகொள் குணபால் வெள்ளைப் பிள்ளையே
         ஆனந்த வல்லி யருட்கனு கூலா
         ஈனந் தவிர்த்திடு மிரட்டைப் பிள்ளையார்

ராகம்-அட்டாணா.

         சரவண பவனே சத்தகன் னியர்காள்
         வரமிக வுதவும் வள்ளிநா யகியே
         எக்கலா தேவி யிறைஞ்சினே னுங்களை
         மிக்கவுன் மகிழ்வொடு மேவியென் முன்னின்
         றிந்தமெல் லியலா ளெண்ணிய வெண்ணம்