பக்கம் எண் :

53

         தமரு கத்தனி ரேகையா மிது
             சங்க ரேகையீ தம்மே
         தங்கு நின் மனையி லென்றும் வாத்தியந்
             தகமு ழக்குமிவை யம்மே
         விமல முற்றிடும் வாணி செங்கையில்
             விளங்கு ரேகையீ தம்மே
         மேவு மின்னது யாரு மெச்சிடும்
             வித்தை நல்கிடு மம்மே
         ஓர்வ லஞ்சுழி யுனது மார்பினி
             லுற்றி லங்குமீ தம்மே
         உன்றனக்கி தென்று மன்னிடு
             நன்றி யேதரு மம்மே
         தார்வி ளங்குமுன் வலமுலைகணோர்
             தழும்பு தோற்றிய தம்மே
         தாங்கு பெண்களோர் நான்கு மைந்தனு
             முனக்களித்திடு மம்மே
         வார்பொ ருத்திடத் தோளி லேயொரு
             மறுவிருக்கிற தம்மே
         மற்றிதாலுனை யெவரு மெச்சிட
             மகிழ்ந்தி லங்குவை யம்மே
         பார்வை நீடுறு மேரினால் வெகு
             பாக்கி யம்வரு மம்மே
         பன்னுசீர்ச்சர போஜிமன்னவன்
             மன்னு தஞ்சைவள ரம்மே



மதனவல்லி சொல்லுதல்.

         இனக்கதிர் முத்து மாலையுங் களிறு
             மெழிலுறு சிவிகையும் பரியும்
         தனக்குவை பிறவு முயர்புல வோர்க்குத்
             தருதலாற் புயலினை வென்ற