மதனவல்லியின் கைரேகைகளின் விசேஷத்தைபற்றி
குறத்தி சொல்லுகிறாள்.
___
குறத்தி பாட்டு.
ராகம் - பௌளி] கண்ணிகள். [தாளம் - திச்ரம்
ஈதுவச்சிர ரேகை முன்னிதை
யிந்திராணி கையிற் கண்டேன்
இன்னதாலுன் மணாள னிந்திர
னெய்து போகமுள னம்மே
மாது கேளிந்த மகுட ரேகையை
வள்ளி யம்மைகையிற் கண்டேன்
மருவி தாலுன்ற கொழுநன் வேளென
வருவ ளின்புற வம்மே
ஓது மின்னது சூல ரேகையீ
துமைம லர்க்கையிற் கண்டேன்
ஓங்கு மின்ன தாலுன் காதல
னுயர்ச்சி பெற்றிருப்பா னம்மே
கோதில் சக்கர ரேகை யீதிதைக்
குலவு செல்விகையிற் கண்டேன்
குறிக்கி னின்மண மகனிம் மேதினி
புரப்ப னின்னதா லம்மே
குமரி யாகிய துர்க்கை கைதனிற்
குலவி ரேகையீ தம்மே
கூறுமின்னது தேறு வெற்றிநின்
கேள்வற் கீந்திடு மம்மே
கமல ரேகையீ திரதி தன்கையிற்
கண்ட ரேகையா மம்மே
கருது நின்கணவ னீடி தால்வெக
காமியாயிருப்ப னம்மே
|