நீனிலங்கொள் சரபோஜி மன்னவர் வாழ்
தஞ்சைவள ரம்மே உன்றன்
நீண்மலர்க்கை தன்னையிங்கே நீட்டுகுறி
பார்த்துரைக்க வம்மே
___
குறத்தி குறிசொல்ல ஆரம்பிக்கிறாள்.
___
குறத்தி பாட்டு.
ராகம் - சாரங்கா] கண்ணிகள். [தாளம் - திச்ரம்
உள்ளபடி குறியுனக்குக் கூறிடுவே னம்மே-முன்னம்
ஒரு சிறங்கைக் கஞ்சிபசி யாறிடவா-ரம்மே
பிள்ளைதலைக் கொருகரண்டி யெண்ணெயூற்றி டம்மே-அந்தப்
பிள்ளையார்க்குப் படைத்தவெலா மெடுத்துதவிங் கம்மே
தள்ளவொண்ணா வெற்றிலைபாக் கித்தனைதா வம்மே-கௌளி
சத்தமிட்டுன் வலப்புறத்திற் கத்துதல்கே ளம்மே
கள்ளமில்லாச் செல்வமிக வருகுதுபா ரம்மே-அங்கோர்
காரிகைதான் வீதியில்வந் தேனெனலோ ரம்மே
கந்தனுக்கு படைத்ததினை மாவையுத வம்மே உன்றன்
கையதனால் வைத்தநிறை நாழியுநல் கம்மே
இந்தவகை யெலாமெங்கட் கீந்திடுத லம்மே-பாரில்
எங்குமுள்ள முறையமைதா மின்றைக்கல்ல வம்மே
சுந்தரமார் நின்கையை நீட்டிடுமுன் னம்மே-குறி
சொல்லுசொல்லென் றாந்தைபல்காற் சொல்லுதல்கா-ணம்மே
சந்ததமுஞ் செம்பொன்மழை பொழிந்துமகிழ்ந் தம்மே நாளும்
தஞ்சையில்வாழ் சரபமன்ன ரருளுனக்குண் டம்மே
___
|