மதனவல்லி விருத்தம்.
___
குலவுமல யத்துதித்து வந்த தென்றற்
குழவிமலர் பறித்துவிளை யாடுஞ்சோலை
சுலவுமெழிற் றஞ்சைநகர் தன்னில் வாழும்
தோன்றலெனுஞ் சரபோஜி மன்னர் செங்கைத்
தலமினிது பார்த்துரைத்தா யெனது கையுந்
தகவுபெறப் பார்த்துள்ள துரைப்பா யென்னின்
அலகில்கலை கற்றகுற மாதே யுன்ற
னகமகிழ வேண்டுபொரு ளுதவி வேனே
___
குறத்தி குறிசொல்லுவதற்கு வேண்டிய சாமக்கிரியை
களைப்பற்றிச் சொல்லுகிறாள்.
___
குறத்தி பாட்டு.
ராகம்-பரசு] கண்ணிகள். [தாளம்-திச்ரம்
சாணகத்தான் முழச்சதுர மெழிகி விளக்
கேற்றி வைத்தி டம்மே-அதில்
தந்திமுக மைந்தனையே சந்தனம்பூ
வறுகணிந்தி டம்மே
காணலுறு கனிவகையெள் பொரிதேங்காய்
நிவேதனஞ்செய் யம்மே-பின்பு
கவிணுறுவெற் றிலைதுவர்க்காய் வைத்தொருபொற்
காசும்வைத்தி டம்மே
மாணுறுதூ பங்காட்டு மந்திரத்தா
லருச்சனைசெய் யம்மே-எதிர்
வந்தனஞ்செய் தேத்திடுன்றன் மனக்குறிப்பைக்
குறித்துக்கொள்வா யம்மே
|